Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் ரூட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ரூட்டோ
2014 ஆம் ஆண்டில் ரூட்டோ
கென்யாவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
பதவியில்
தீர்மானிக்கப்பட உள்ளது
Deputyஇரிகாதி காசாகுவா (தேர்வு)
Succeedingஉகுரு கென்யாட்டா
கென்யாவின் துணை அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 ஏப்ரல் 2013
குடியரசுத் தலைவர்உகுரு கென்யாட்டா
முன்னையவர்காலோன்சோ முசுயோகா (துணைத்தலைவர்)
கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் (கென்யா)
பதவியில்
21 ஏப்ரல் 2010 – 19 அக்டோபர் 2010
குடியரசுத் தலைவர்முவாய் கிபாகி
பிரதமர்இரைலா ஒடிங்கா
பின்னவர்எல்லெென் ஜெப்கெமோய் சம்பிலி (பொறுப்பு)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
வில்லியம் கிப்சிர்சிர் சமோய் அராப் ரூட்டோ

21 திசம்பர் 1966 (1966-12-21) (அகவை 57)
கமாகட், கென்யா
இறப்புஉயர்கல்வித் துறை அமைச்சர் (கென்யா)
இளைப்பாறுமிடம்உயர்கல்வித் துறை அமைச்சர் (கென்யா)
அரசியல் கட்சி
  • கென்ய ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் (2005 ஆம் ஆண்டிற்கு முன்னால்)
  • ஆரஞ்சு ஜனநாயக இயக்கம் (2005–2011)
  • ஒருங்கிணைந்த குடியரசுக் கட்சி (2012–2016)
  • கென்யாவின் ஜூபிலி கட்சி (2016–2021)
  • ஒன்றிணைந்த ஜனநாயகக் கூட்டணி (கென்யா) (2021–தற்போது வரை)
துணைவர்
ரேச்சல் ரூட்டோ (தி. 1991)
பிள்ளைகள்7
பெற்றோர்
  • உயர்கல்வித் துறை அமைச்சர் (கென்யா)
இணையத்தளம்Official website

வில்லியம் சமோய் அராப் ரூட்டோ (William Samoei Arap Ruto, பிறப்பு: 21 திசம்பர் 1966) கென்யாவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கென்ய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2013 முதல் கென்யாவின் துணை அரசுத்தலைவராக பணியாற்றினார்.[2][3][4] 2013 அதிபர் தேர்தலில், அவர் ஜூபிலி கூட்டணி சார்பில் அதிபர் உஹுரு கென்யாட்டாவுடன் துணை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூட்டோ 1998 முதல் 2013 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ஆகத்து 2002 முதல் டிசம்பர் 2002 வரை டேனியல் அராப் மோய் நிர்வாகத்தில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் இவர் முவாய் கிபாகி நிர்வாகத்தில் 2008 முதல் 2010 வரை விவசாயத்துறை அமைச்சராகவும், ஏப்ரல் முதல் அக்டோபர் 2010 வரை உயர் கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார் . இவர் 2022 அரசுத்தலைவர் தேர்தலில் கென்யாவின் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

ரிப்டு பள்ளத்தாக்கு மாகாணத்தில் [5] உள்ள கலென்ஜின் மக்களைச் சேர்ந்த வில்லியம் ருடோ 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி காமகுட், உசின் கிஷு கவுண்டியில் உள்ள சம்புட் கிராமத்தில் டேனியல் செருயோட் மற்றும் சாரா செருயோட் ஆகியோருக்குப் பிறந்தார்.[6] இவர் தனது ஆரம்பப் பள்ளிக் கல்வியை கெரோடெட் தொடக்கப் பள்ளியில் பயின்றார். நந்தி கவுண்டியில் உள்ள கப்சபெட் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்கு முன், அவர் தனது சாதாரண நிலைக் கல்விக்காக வாரெங் இடைநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் நைரோபி பல்கலைக்கழகத்தில் தாவரவியல் மற்றும் விலங்கியல் துறையில் இளம் அறிவியல்பட்டத்தை 1990 ஆம் ஆண்டி பெற்றார். ரூட்டோ பின்னர் தாவர சூழலியலில் பாடப்பிரிவில் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்து 2011-ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு, இவர் முனைவர் பட்ட ஆய்விற்குப் பதிவு செய்தார். பல பின்னடைவுகளுக்குப் பிறகு,[7] இவர் நைரோபி பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வினை முடித்து, 21 டிசம்பர் 2018 அன்று பட்டம் பெற்றார். கென்யாவின் நைரோபி தேசிய பூங்காவில் உள்ள தாவர இனங்களின் பன்முகத்தன்மை மற்றும் இரண்டு ஈரநிலங்களின் இயைபு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை உட்பட பல கட்டுரைகளை ரூட்டோ எழுதியுள்ளார்.[8] இளங்கலைப் படிப்பிற்காக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த காலத்தில், ரூட்டோ கிறித்துவ சங்கத்தில் தீவிர உறுப்பினராக இருந்தார். நைரோபி பல்கலைக்கழகத்தின் பாடகர் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[9]

நைரோபி பல்கலைக்கழகத்தில் இவரது தேவாலய தலைமை நடவடிக்கைகளின் மூலம் ரூட்டோ அரசுத் தலைவர் டேனியல் அராப் மோயை சந்தித்தார், பின்னர் அவர் 1992 பொதுத் தேர்தல்களின் போது இவரை அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார்.[10]

ரூட்டோ தனது சொந்த கிராமமான சுகோயில் குறிப்பிடத்தக்க அளவிலான கோழிப் பண்ணையை வைத்திருக்கிறார்.[11]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1990 ஆம் ஆண்டில் நைரோபி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, ரூட்டோ கென்யாவின் வடக்கு ரிப்ட் பகுதியில் 1990 முதல் 1992 வரை ஆசிரியராகப் பணியாற்றினார், அங்கு இவர் உள்ளூர் ஆப்பிரிக்க உள்நாட்டு தேவாலயத்தின் (AIC) பாடகர் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[10]

ஒய்கே'92

[தொகு]

1992 ஆம் ஆண்டில் அரசுத்தலைவர் மோயின் மறுதேர்தலுக்காக பரப்புரை செய்து கொண்டிருந்த ஒய்கே'92 பிரச்சாரக் குழுவின் பொருளாளராக ஆனபோது ரூட்டோ தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கிருந்து கென்ய அரசியலின் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார்.[9] இந்தக் காலகட்டத்தில் இவர் சிறிதளவு செல்வங்களைச் சேர்த்ததாகவும் நம்பப்படுகிறது. 1992 தேர்தலுக்குப் பிறகு, அரசுத்தலைவர் மோய் ஒய்கே'92 ஐ கலைத்தார். கென்ய ஆப்பிரிக்க தேசிய ஒன்றியக் கட்சியின் (அப்போதைய கென்யாவின் ஆளும் கட்சி) கிளை கட்சி பதவிகளுக்குப் போட்டியிட முயன்றார், ஆனால் வெற்றிபெறவில்லை.[12]

நாடாளுமன்ற உறுப்பினர்

[தொகு]

ரூட்டோ 1997 பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டார். அப்போது இவர் வியக்கத்தக்க வகையில் அப்போதைய பதவியில் இருந்த ரூபன் சேசியர், மோயின் விருப்பமான வேட்பாளர் மற்றும் உசின் கிஷு கட்சியின் கிளைத் தலைவர் மற்றும் உதவி அமைச்சரை தோற்கடித்தார்.[13][14] இதற்குப் பிறகு, அவர் பின்னர் மோயின் ஆதரவைப் பெற்று கென்ய ஆப்பிரிக்கத் தேசிய ஒன்றியக் கட்சியின் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[15] 2002 ஆம் ஆண்டில் மோயின் விருப்பமான வாரிசான உஹுரு கென்யாட்டாவிற்கு இவர் அளித்த வலுவான ஆதரவு அவருக்கு உள்துறை (உள்துறை) அமைச்சகத்தின் உதவி அமைச்சராகப் பதவி பெறுவதற்கான வாயப்பைப் பெற்றுத் தந்தது. இந்தத் தேர்தலுக்குப் பின்னர், சில ஆளும் கட்சி அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் சேருவதற்காக பதவி விலகியதால், இவர் அமைச்சரவையில் முழு ஆய அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது, ஆனால், இவர் தனது நாடாளுமன்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ரூட்டோ அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டில் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உஹுரு கென்யாட்டா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[15]

2005 ஆம் ஆண்டில், கென்யா ஒரு அரசியலமைப்பு வாக்கெடுப்பை நடத்தியது, அதை இவரது கட்சி எதிர்த்தது.[9] ஆளும் தேசிய வானவில் கூட்டணி அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள், முக்கியமாக முன்னாள் கென்ய ஆப்பிரிக்க தேசிய ஒன்றியக் கட்சியில் பதவியிலிருந்து 2002 ஆம் ஆண்டில் தாராளமய ஜனநாயகக் கட்சி (கென்யா) என்ற பதாகையின் கீழ் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்தவர்கள் மற்றும் அரசுத்தலைவர் முவாய் கிபாகியின் மீது அதிருப்தி அடைந்தவர்கள். தேர்தலுக்கு முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்கவில்லை.[16] அதிகாரப் பங்கீடு மற்றும் தலைமை அமைச்சர் பதவி உருவாக்கப்படுதல் ஆகியவற்றில் இவர்கள் கென்ய ஆப்பிரிக்க தேசிய ஒன்றியக் கட்சியுடன் இணைந்து முன்மொழியப்பட்ட அரசியலமைப்பை எதிர்த்தனர்.[17]

அரசியலமைப்பு திருத்தத்திற்கான வாக்கெடுப்பில் எதிர்ப்பிற்கான நிறமாக ஆரஞ்சு நிறத்தினைக் குறியீடாகக் கொண்டிருந்ததால் இந்த இயக்கம் ஆரஞ்சு ஜனநாயக இயக்கம் என பெயரிடப்பட்டது. ரூட்டோ இந்த இயக்கத்தின் மேல்மட்டத்தில் இருந்து கொண்டு பென்டகனின் குரலுக்கு வாயசைத்துக் கொண்டிருந்தார். ரூட்டோ இரிஃப்டு பள்ளத்தாக்கு மாகாணத்தின் வாக்குகளைத் திரட்டுவதில் வெற்றி கண்டார். ஆரஞ்சு ஜனநாயகக் கூட்டணியானது அரசிலமைப்புத் திருத்தத்திற்கெதிராக வெற்றி பெற்றது.[18]

2006 ஆம் ஆண்டு சனவரியில் ரூட்டோ எதிர்வரும் 2007 கென்யப் பொதுத் தேர்தலில் அரசுத்தலைவர் பதவிக்குத் தான் போட்டியிட இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். இவரது கட்சியிலிருந்த சக தலைவர்கள் முன்னாள் அரசுத்தலைவர் மோய் உட்பட இவரது கருத்தினைக் கண்டனம் செய்தனர். இதற்கிடையில் ஆரஞ்சு ஜனநாயகக் கூட்டணி அரசியல் கட்சியாக உருமாறியது.[9] ரூட்டோ ஆரஞ்சு ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக அரசுத்தலைவர் வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். 2007 செப்டம்பர் 1-இல், இவர் 386 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றார். இரைலா ஒடிங்கா 2656 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். முசாலியா முடவாடி 391 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.[19] ரூட்டோ வாக்கெடுப்பிற்குப் பிறது ஒடிங்காவிற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.[20] கென்ய ஆப்பிரிக்க தேசிய ஒன்றிய கட்சியானது உகுரு கென்யாட்டாவின் கீழ் கிபாகிக்கு ஆதரவளித்துள்ளது.[21] 2007 அக்டோபர் 6 ஆம் நாள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார்.[22]

2007 ஆம் ஆண்டு திசம்பரில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தல் நெருக்கடியான சூழலில் முடிந்தது. கென்யாவின் தேர்தல் ஆணையம் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்தது. ஆனால், இரைலா மற்றும் ஆரஞ்சு ஜனநாயக இயக்கம் இருவரும் தாங்களே வெற்றி பெற்றதாக கோரினர். முவாய் கிபாகி 2007 அரசுத்தலைவர் தேர்தலையடுத்து அவசரகதியில் பதவியேற்றார்.  தேர்தல் மற்றும் வெற்றி குறித்த சர்ச்சை ஆகியவற்றைத் தொடர்ந்து 2007-2008 ஆண்டுகளில் தொடர் அரசியல் வன்முறை நிகழ்வுகளுக்குள் அமிழ்ந்து போனது.  பின்னர் கிபாகி ஒடிங்காவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒத்துக்கொண்டார்.[23][24]

ஒரு மாபெரும் கூட்டணி அமைச்சரவையானது 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 17 ஆம் நாள் பதவியேற்றது. ரூட்டோ வேளாண்மைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ரூட்டோ எல்டோர்ட் வடக்குத் தொகுதியிலிருந்து 2008 மார்ச் 4 ஆம் நாளன்று பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.[25]

கென்யாவின் 2007/2008 அரசியல் வன்முறையில் ஈடுபட்டதற்காக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் பட்டியலில் ரூட்டோவும் ஒருவர். இருப்பினும்,  பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற வழக்கு முக்கிய அரசு தரப்பு சாட்சிகளை திரும்பப் பெறுவது தொடர்பான சவால்களை எதிர்கொண்டது. 2016 ஆம் ஆண்டு ஏப்ரலில், ரூட்டோ மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கைவிட்டது.[26]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kenya's deputy president Ruto declared election winner". AP NEWS (in ஆங்கிலம்). 15 August 2022. Archived from the original on 15 August 2022. பார்க்கப்பட்ட நாள் 15 August 2022.
  2. "The Office Of The Deputy President, Kenya". deputypresident.go.ke. 17 May 2022. Archived from the original on 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
  3. "William Ruto". kenyans.co.ke. 17 May 2022. Archived from the original on 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
  4. "Kenya General Election Results (2013)". iebc.or.ke. 17 May 2022. Archived from the original on 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
  5. "William Ruto's rise from chicken seller to Kenya's president-elect". https://www.bbc.com/news/world-africa-24017899. 
  6. "William Samoei Arap Ruto". Africa Confidential. Archived from the original on 30 May 2022. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
  7. "I failed Ph.D. exam, admits DP William Ruto". Business Today. 2 December 2016. Archived from the original on 21 December 2018. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  8. Ruto, W. K. S. (2 November 2012). "Plant Species Diversity and Composition of Two Wetlands in the Nairobi National Park, Kenya" (in en-US). Journal of Wetlands Ecology 6: 7–15. doi:10.3126/jowe.v6i0.5909. https://www.nepjol.info/index.php/JOWE/article/view/5909. பார்த்த நாள்: 21 December 2018. 
  9. 9.0 9.1 9.2 9.3 Joel Muinde (21 July 2019). "A brief profile of DP William Ruto: PHOTOS". K24. Archived from the original on 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 29 April 2020.
  10. 10.0 10.1 Fayo, G (18 May 2022). "How shy Ruto rose from a CU leader to money, power". The Business Daily. Archived from the original on 2 June 2022. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.
  11. Shiundu, Alphonce. "William Ruto: How he rose from roadside Kuku-seller to multi-billionaire". Standard Entertainment and Lifestyle. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
  12. "How Moi created then decimated youth lobby | Nation". 3 July 2020. Archived from the original on 3 August 2020. பார்க்கப்பட்ட நாள் 29 April 2020.
  13. Courting the Kalenjin: The Failure of Dynasticism and the Strength of the ODM Wave in Kenya's Rift Valley Province, Gabrielle Lynch, African Affairs, Vol. 107, No. 429 (Oct. 2008), pp. 541–568
  14. "Mzee Moi was 'vicious', interesting fellow – DP Ruto". The Star. Archived from the original on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 April 2020.
  15. 15.0 15.1 Omanga, -Beauttah. "How Ruto rose to be influential personality in Kenyan politics". The Standard (Kenya). Archived from the original on 5 June 2022. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
  16. Wanga, Justus (4 September 2021). "Matere Kerri: Why we broke the famous MoU with Raila". The Nation. Archived from the original on 18 May 2022. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.
  17. "Kenyans say no to new constitution". 22 November 2005. Archived from the original on 27 May 2020. பார்க்கப்பட்ட நாள் 29 April 2020 – via www.theguardian.com.
  18. Andreassen, Bård Anders; Tostensen, Arne (16 December 2006). "Of Oranges and Bananas: The 2005 Kenya Referendum on the Constitution". CMI Working Paper WP 2006: 13. https://www.cmi.no/publications/2368-of-oranges-and-bananas. பார்த்த நாள்: 29 April 2020. 
  19. "It's Raila for President", The East African Standard, 1 September 2007. பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம்
  20. Maina Muiruri, "ODM 'pentagon' promises to keep the team intact" பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம், The East African Standard, 2 September 2007.
  21. "Nation – Breaking News, Kenya, Africa, Politics, Business, Sports | HOME". Nation. Archived from the original on 21 October 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2020.
  22. The East African Standard, 7 October 2007: Ruto abandons Kanu's top post பரணிடப்பட்டது 31 சனவரி 2008 at the வந்தவழி இயந்திரம்
  23. "Odinga sworn in as Kenya PM" பரணிடப்பட்டது 26 மே 2008 at the வந்தவழி இயந்திரம், Al Jazeera, 17 April 2008.
  24. Anthony Kariuki, "Kibaki names Raila PM in new Cabinet"[தொடர்பிழந்த இணைப்பு], nationmedia.com, 13 April 2008.
  25. "William Ruto, EGH, EBS". Mzalendo (in ஆங்கிலம்). Archived from the original on 6 December 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2019.
  26. "International criminal court abandons case against William Ruto". The Guardian. 5 April 2016 இம் மூலத்தில் இருந்து 5 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160405192821/http://www.theguardian.com/world/2016/apr/05/international-criminal-court-william-ruto-kenya-deputy-president-election-violence. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ரூட்டோ&oldid=3926342" இலிருந்து மீள்விக்கப்பட்டது