வீ
வீ | |
---|---|
தயாரிப்பாளர் | நின்டென்டோ |
வகை | நிகழ்பட ஆட்ட இயந்திரம் |
தலைமுறை | ஏழாம் தலைமுறை |
முதல் வெளியீடு | நவம்பர் 19, 2006 |
CPU | PowerPC |
ஊடகம் | குறுவட்டு |
நினைவகம் | 512 மெகாபைட்டு Internal திடீர் நினைவகம் |
உள்ளீட்டு கருவிகள் | வீ தொலைதொடர்பு கருவி, நின்டென்டோ கேம்கியுப் கட்டுபாட்டாளர் |
இணைப்பு | ஒய்-ஃபை 2 × USB 2.0 LAN Adapter (via USB) |
இணையச் சேவை | Wi-Fi இணைப்பு வீ விற்பனை அலைவரிசை |
விற்பனை எண்ணிக்கை | 34.55 மில்லியன் |
அதிகம் விற்பனையாகும் விளையாட்டு | வீ விளையாட்டு |
முந்தைய வெளியீடு | நின்டென்டோ கேம்கியுப் |
வீ ( wii ) என்று அழைக்கப்படும் நிகழ்பட விளையாட்டு சாதனம் முதன்முறையாக நின்டென்டோ என்ற ஜப்பானிய நிறுவனத்தால் டிசம்பர் 6ஆம் திகதி 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போதய சந்தையில் விற்கப்படும் வீ சாதனங்கள், ஏழாம் தலைமுறையை சார்ந்தவை. வீ நிகழ்பட விளையாட்டு சாதனத்தின் முக்கிய போட்டியாளராக கருதப்படும் மற்ற சாதனங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் 3 ஆகும். வீ நிகழ்பட விளையாட்டு சாதனம் வீ தொலைதொடர்பு கருவி, வீ உணர்கருவி, வீ முனையம் ஆகியவற்றை உள்ளடக்கியது. வீ முனையம் தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டு, இயக்குபவர் விளையாடும் விளையாட்டின் நிகழ்படம், தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் காண்பிக்கப்படும். இந்நிகழ்பட சாதனத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது, இச்சாதனம் இதை இயக்குபவரின் அங்க அசைவுகளை துல்லியமாக அனுமானித்து அதற்கு எற்றவாறு திரையில் காட்சிகளை மாற்றவல்லது. இயக்குபவரின் கையில் இருக்கும் வீ தொலைதொடர்பு கருவியின் அசைவுகளை 3 பரிமாணத்திலும் கணிக்கவல்ல வீ உணர்கருவி மூலம் இது சாத்தியமாகிறது. இத்தன்மைகளால் விளையாட்டின்போது, நேரடியாக உண்மையில் விளையாடுவதுபோன்ற அனுபவத்தைப் பெறலாம்.