Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

வெண் எகிர்சிதறல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமியின் பரப்பின் பல நிலைகளுகேற்ப பிரதிபலிக்கப்பட்ட சூரியவொளியின் சதவிகிதங்கள்.

ஒரு பொருளின் வெண் எகிர்சிதறல் அல்லது எதிரொளி திறன் (Albedo) என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும், இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் (அதனினின்று) பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும். இஃது அப்பொருள் அல்லது பரப்பின் சிதை பிரதிபலிப்பின் (விகிதமாதலின்) பரிமாணமற்ற குறிப்பளவாகும். (Albedo என்பது இதன் ஆங்கில நிகர்ப்பதமாகும், இவ்வார்த்தை, albus எனும் "வெண்மை" என்பதற்கான இலத்தீன் வார்த்தையினின்று வரையப்பட்டது.)

வெண் எகிர்சிதறல் என்பது வானிலை ஆய்வு மற்றும் வானியல் ஆகியத்துறைகளில் ஒரு முக்கிய கருதுகோளாகும். வானிலைஆய்வில் சிலசமயங்களில் இஃதை சதவிகிதமாகவும் வழங்குவதுண்டு. இதன் மதிப்பு உள்வரு கதிர்வீச்சின் அதிர்வெண் சார்ந்தது: தகுதிமுறையின்றி (ஆனால் வழக்கில்), இஃது (கண்னுக்கு புலனாகும்) ஒளி நிழற்பட்டையிலான அனைத்து அதிர்வெண்களுக்கான மதிப்பின் ஏற்புடைய சராசரியாகக் கொள்ளப்படும். பொதுவில், வெண் எகிர்சிதறல் உள்வரு கதிரின் திசை மற்றும் திசைப்பரவலை சார்ந்தும் இருக்கும். ஆனால், எல்லா கோணங்கனின்றும் ஒரே அளவில் ஒளியைச்சிதறும் லாம்பெர்ட்சியன் (Lambertian) பரப்புகள் இதற்கு விதிவிலக்கு, ஆதலின், அவற்றின் வெண் எகிர்சிதறல் உள்வரு கதிரின் திசைப்பரவலை சார்ந்திராது.[1][2][3]

வெண் எகிர்சிதறல்கள் ஒரு பயனுள்ள முதல்நிலை தோராயமதிப்பு என்றாலும், நடைமுறையில், ஒரு பெருளின் ஒளிச்சிதறல் பண்புகளைத் துல்லியமாயறிய இருவழி பிரதிபலிப்பு பரவல் சார்பு (bidirectional reflectance distribution function (BRDF)) தேவை.

பூமிசார் வெண் எகிர்சிதறல்

[தொகு]

கண்னுக்கு புலனாகும் ஒளியில் புதுவெண்பனிக்கு 90% என்பது முதல் கருமையான கரித்துண்டிறகு 4% என்பதுவரை வெண் எகிர்சிதறலின் மதிப்புகள் மாறுபடும். கரும்பொருளின் சூன்ய மதிப்பை அனுகும் வெண் எகிர்சிதறல் தெரிநிலை மதிப்புகள் பெறவல்ல நிழற்சூழ் பள்ளங்கள் இதற்கு விதிவிலக்கு. தொலைவினின்று காண்கையில் கடற்பரப்புகள், பெரும்பான்மயான வனப்பகுதிகளைப் போன்றே, மிகக்குறைந்த வெண் எகிர்சிதறலையே கொண்டுள்ளன. ஆனால், பாலைவனங்கள் நில்பரப்புகளிலேயே மிகவதிகமான வெண் எகிர்சிதறல் மதிப்பை பெற்று விளங்குகின்றன. பெரும்பான்மயான நிலப்பரப்புகள் 10 முதல் 40% வரையே வெண் எகிர்சிதறல் பெற்று விளங்குகின்றன.

பூமியின் சராசரி வெண் எகிர்சிதறல் மதிப்பு 30% ஆகும், இஃது கடல்பரப்பின் மதிப்பைவிட மிகஅதிகம், காரணம் பூமியைச் சூழ்ந்துள்ள மேகங்களேயாகும்.

மாதிரி வெண் எகிர்சிதறல் தரவுகள்
பரப்பு வெண் எகிர்சிதறல்
பசும் அஷ்பால்ட் 0.04
கனிஃபர் காடுகள்
(Summer)
0.08
பழைய அஷ்பால்ட் 0.12
வெறுமணல் 0.17
பசும்புல் 0.25
பாலைவன மணல் 0.40
புதிய கலவை 0.55
புதுவெண்பனி 0.80–0.90

வானியல் வெண் எகிர்சிதறல்

[தொகு]

கோள்கள், துணைக்கோள்கள், விண்கல்கள் முதலியவற்றின் வெண் எகிர்சிதறல் மதிப்புகள் அவற்றின் பண்பியல்புகளை அறிய உதவும். வெண் எகிர்சிதறல்கள், ஒளியலைநீளம், ஒளிக்கோணம் (அதிர்முகக் கோணம்) மற்றும் காலம் சார்ந்து வெண் எகிர்சிதறல்களின் வேறுபாடு இவையே photometry என்னும் வானியல்துறையின் பெறும்பகுதியாகும். தொலைநோக்கியில் பிரித்தறிய இயலாத சிறிய மற்றும் தொலைதூர விண்பொருட்களைப்பற்றி நாம்மறியும் பலத்தரவுகள் வெண் எகிர்சிதறல் மூலம் அறியப்பட்டதே.

உதாரணமாய், சூரியமண்டலத்திற்கு அப்பாலுள்ள விண்பொருட்களின் தனிமுழு வெண் எகிர்சிதறல் மதிப்பைக் கொண்டு அவற்றின் பரப்பிலுள்ள பனியளவை அளக்கலாம். அதேபோல், அலைமுகக் கோணம் சார்ந்த வெண் எகிர்சிதறலின் மாற்றங்களைக் கொண்டு அவ்விண்பொருட்களின் பாறைப்போர்வையின் பண்பியல்புகளை அறியலாம்.

இன்னும்பிற வெண் எகிர்சிதறல் வகைகள்

[தொகு]

ஒற்றைச்சிதறல் வெண் எகிர்சி என்பது சிறியத் துகள்களின் மேல் மின்காந்த கதிர்களின் சிதறலை அளக்கும். இஃது அத்துகளின் பண்பியல்பு (ஒளிமுறிவுச் சுட்டெண் [அ] ஒளிவிலகல் எண்), அளவு, மற்றும் உள்வரு கதிரின் அலைநீளம் ஆகியவற்றை சார்ந்து இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Greenland's Ice Is Growing Darker". NASA. 2011. பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.
  2. Pharr; Humphreys. "Fundamentals of Rendering - Radiometry / Photometry" (PDF). Web.cse.ohio-state.edu. Archived (PDF) from the original on 2022-10-09. பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
  3. Coakley, J. A. (2003). "Reflectance and albedo, surface". Encyclopedia of the Atmosphere. Ed. J. R. Holton. Academic Press. 1914–1923. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_எகிர்சிதறல்&oldid=4103486" இலிருந்து மீள்விக்கப்பட்டது