Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

ரிச்சர்ட் டாக்கின்சு

விக்கிமேற்கோள் இலிருந்து
ரிச்சர்ட் டாக்கின்சு (2008)

கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு (Clinton Richard Dawkins; கிளின்டன் ரிச்சர்ட் டாக்கின்ஸ்; பிறப்பு: மார்ச் 26, 1941) பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர். இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • வானவில் எப்படி உண்டாகிறது என நாம் புரிந்து கொள்ளத் தொடங்கிய பின்பும், அந்நிகழ்வைப் பற்றிய நம் வியப்பு குறைவதில்லை.[1]
  • இல்லாத பெண்ணுக்கும், இல்லாத ஆணுக்கும் இடையில் என்ன வேற்றுமை இருக்கப் போகிறது? [1]
  • இந்த உலகில் உண்மையான கவிதைகள் இருக்கின்றன. ஆனால் அறிவியலோ உண்மைகளின் கவிதைகள்.[2]
  • அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 The God Delusion என்னும் நூலில் இருந்து
  2. The Enemies of Reason, "Slaves to Superstition" [1.01], 13 August 2007, timecode 00:38:16ff.
[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=ரிச்சர்ட்_டாக்கின்சு&oldid=37240" இலிருந்து மீள்விக்கப்பட்டது