Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                

மீடியாவிக்கி

விக்கி இணையத்தை இயக்கும் மென்பொருள்

மீடியாவிக்கி மென்பொருளானது GNU அனுமதிமூலம் விநியோகிக்கப் படுகின்றது. இது PHP மொழியில் உருவாக்கப் பட்டுள்ளது அத்துடன் இதற்கு MySQL தகவற் தளமும் (இதில் PostGre SQL-இலுக்கு சுமாரான ஆதரவுண்டு) தேவைப்படுகின்றது. சரித்திரரீதியாக இலவசக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் தேவைகளை நிறைவேற்றவே இம்மென்பொருளானது விருத்தி செய்யப்பட்டது. இன்று இது விக்கி சார் தேவைகளுக்கான ஓர் மிகப் பிரபலமான மென்பொருளாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்று விக்கிமீடியா அறக்கட்டளை, விக்கியா மற்றும் பல்வேறுபட்ட பிரபலமான விக்கித்திட்டங்களும், நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் அறிவாறுமைத் திட்டங்களும் CMS (Content Management System) போன்றவையும் மீடியாவிக்கியினால் நிர்வகிக்கப்படுகின்றது. குறிப்பாக நாவல் நெட்வேர் நிறுவனமானது பலவிக்கி பல முக்கியமான இணையத்தளங்களை மீடியாவிக்கி மென்பொருள் மூலம் நிர்வகித்து வருகின்றனர் இது பொதுவான இணையப் பாவனையாளாரால் எழுதக் கூடியவை அல்ல.

மீடியாவிக்கி மென்பொருளின் செயற்பாடுகளானது நீட்சிகள் மூலம் கூட்டப்படக் கூடியவை. பல்மொழித் திட்டமான விக்கிமீடியாத் திட்டத்தில் இம் மென்பொருளானது பயன்படுகின்றதால் சர்வதேச மயமாக்கல் முக்கிய ஓர் விடயமாக இம்மென்பொருளை விருத்தி செய்பவர்கள் கருதுகின்றனர். பயனர் இடைமுகமானது 70-இற்கும் மேற்பட்ட மொழிகளில் பூரணமாகவோ, பகுதியாகவோ மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதன் நிர்வாகிகள் மேலும் வேண்டிய மாற்றங்களை உண்டுபண்ணலாம். விக்கிப்பீடியாவானது உலகின் மிகப் பிரம்மாண்டமான இணையத்தளங்களில் ஒன்றென்பதால் பல லேயர்களுக்கூடான (layers) Caching மற்றும் Database Replication போன்றவையும் முக்கிய ஓர் விடயமாகவுள்ளது.

சரித்திரம்

தொகு

இம்மென்பொருளானது ஆரம்பத்தில் ஜேர்மன் பல்கலைக்கழக மாணவரும் விருத்தியாளருமான மக்னஸ் மனாஸ்கேயினால் ஆரம்பிக்கப்பட்டது. விக்கிப்பீடியா இதற்கு முன்னர் பேள் (Perl) மொழியில் யூஸ்மொட்விக்கி (UseModWiki) ஐப் பாவித்தது. ஜனவரி 25, 2002 இல் விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது. இதன் மூலம் கூடுதலான வசதிகள் கிடைத்தபோதிலும் முதலாவது நடைமுறைப்படுத்தலானது பல்வேறுபட்ட வினைத்திறன் குறைவடைந்திருந்தது அவதானிக்கப் பட்டது. இதன் பின்னர் இம்மென்பொருளை லீ டானியல் குரூக்கரினால் மீளஎழுதப்பட்டது. பின்னர் பிரோன் விபர் இம்மென்பொருளை வெளிவிடுதற்குப் பொறுப்பானவரும் மிகவும் பொறுப்பான விருத்தியாளருமாக விளங்குகின்றார்.

இதன் முதலாவது பதிப்பில் இருந்து பல்வேறுபட்ட செல்லப் பெயர்களினால் அழைக்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீடியாவிக்கி&oldid=3352821" இலிருந்து மீள்விக்கப்பட்டது