Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேட்டூர் அணை, சேலம் மாவட்டம்

அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்க கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன.

வரலாறு

[தொகு]

பழங்கால அணைகள்

[தொகு]

ஆரம்ப காலங்களில் மெசொப்பொத்தேமியா மற்றும் மத்திய கிழக்கில் அணைகள் கட்டப்பட்டுள்ளது. மெசொப்பொத்தேமியாவின் கணிக்க முடியாத வானிலை காரணமாக டைகிரிஸ் மற்றும் யூப்ரடிஸ் நதிகளில் நீரோட்டத்தை பாதித்தது, இதனால் நீர் நிலைகளை கட்டுப்படுத்த அணைகள் பயன்படுத்தப்பட்டன.

முதன் முதலாக அறியப்பட்ட அணை ஜோர்தான்னில் உள்ள ஜாவா அணை. இந்த அணை ஜோர்தான் தலைநகரான அம்மானின் வடகிழக்கு திசையில் 100 கிலோமீட்டர்கள் (62 mi) தொலைவில் உள்ளது. இந்த அணை புவி ஈர்ப்பு விசையால் செயல்படும் ஒரு அணை. முதலில் ஒரு கல் சுவர் 9-மீட்டர்-high (30 அடி) மற்றும் 1 m-wide (3.3 அடி) அதற்கு ஒரு ஆதாரமாக 50 m-wide (160 அடி) பூமியின் இயற்கையான வளைவும் உள்ளது. இந்தக் கட்டமைப்பு கிமு 3000 ஆண்டுகளுக்கு முந்தையதாக அறியப்படுகிறது.[1][2]

பண்டைய எகிப்தில் வாடி அல்-கராவில் உள்ள சாட்-எல்-காபரா அணை,கெய்ரோவின் தெற்கே சுமார் 25 km (16 mi) தொலைவில் உள்ளது. மேலும் அந்த அணை 102 m (335 அடி) நீளமும், 87 m (285 அடி) அகலமும் கொண்டது. இந்த அணை கிமு 2000 [3] அல்லது கிமு 3000 [4] ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ள நீரை திசைத்திறுப்புவதற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கட்டுமானத்தின் போது பொழிந்த கன மழையாலோ அல்லது சிறிது காலத்திற்குப் பிறகோ அழிந்திருக்கக்கூடும்.[3][4] கி.மு. 19 ஆம் நூற்றாண்டில்,  பன்னிரண்டாவது வம்சத்தின் வந்த பாரோஸ் செனோசெர்ட் III, அமெனேம்ஹத் III மற்றும் அமேன்மேஹத் IV ஆகியோரால் 16 km (9.9 mi) நீலக் கால்வாய் தொண்டப்பட்டு, கால்வாய் ஃபைம் டிப்ரசன் நைல் நதியில் மத்திய எகிப்தில் இணைகிறது. வருடாந்திர வெள்ளத்தின் போது தண்ணீரை சேமித்து வைத்து, சுற்றியுள்ள நிலங்களுக்கு அதை விடுவிப்பதற்காக, கிழக்கு-மேற்காக Ha-Uar எனும் இரண்டு அணைகள் கட்டப்பட்டன.

கி.மு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மத்தியில், நவீன இந்தியாவின் டோலவிராவுக்குள் ஒரு சிக்கலான நீர் மேலாண்மை அமைப்பு கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் 16 நீர்த்தேக்கங்கள், அணைகள் மற்றும் நீர் சேகரித்தல் மற்றும் சேமித்து வைப்பதற்காக பல கால்வாய்கள் கொண்டதாக கட்டப்பட்டது.[5]

கல்லணை, தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே 300 m (980 அடி) நீலமும், 4.5 m (15 அடி) உயரமும் மற்றும் 20 m (66 அடி) அகலமும் கொண்ட கருங்கற்களால் கல்லணை கட்டப்பட்டது. இதன் அடிப்படை கட்டமைப்பு கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.[6] உலகின் இன்னும் பயன்பாட்டில் உள்ள பழமையான நீர்-திசைமாற்றி அல்லது நீர் ஒழுங்குமுறை கட்டமைப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[7] கால்வாய்களின் வழியாக நீர்ப்பாசனத்திற்காக வளமான வண்டல் பிராந்தியத்தில் காவிரி நீரின் வழியை திசை திருப்பவேண்டியது அணையின் நோக்கமாகும்.[8]

ரோமன் பொறியியல்

[தொகு]
ஸ்பெயினில் உள்ள ரோம அணை கார்னல்வோ, சுமார் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பயன்பாட்டில் உள்ளது.

ரோமானிய அணை கட்டுமானம் "ரோமானியர்களின் பொறியியல் திறன் ஒரு பெரிய அளவிலான திட்டத்தை திட்டமிட்டு ஒழுங்குபடுத்துவதற்கான திறனைக் கொண்டுள்ளது."[9] ரோமானிய திட்டமிடுபவர்கள் வறண்ட பருவத்தில் நகர்ப்புற குடியிருப்புகளுக்கு ஒரு நிரந்தர நீர் வழங்கலைப் பெறக்கூடிய பெரிய நீர்த்தேக்கக் அணைப் பற்றிய கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தினர்.[10] மேலும் நீரை ஆதாரமாக கொண்டு இயங்கும் ஹைட்ராலிக் மோட்டார் மற்றும் ரோமன் சிமெண்ட் ஆகிவை மூலம் மிக்ப்பெரிய அளவில் அணைகளை கட்ட முடிந்தது.[9] இதன் மூலம் அதிக் நீரையும் சேமிக்க முடிந்தது. ரோம் சிரியாவில் உள்ள ஹான்ஸ் ஏரி அணை மற்றும் ஹர்பாகா அணை,[11] இது போன்ற பெரிய கட்டமைப்பிற்கு ஓர் உதாரணமாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் அந்த காலத்தில் இவைகள் மிக்ப்பெரிய நீர் பிடிப்பு ஆதாரம் கொண்ட அணைளாகவும் இருந்திருக்கிற்து. ரோம் அருகே சுமிகோ அணை மிக உயர்ந்த அணையாக இருந்திருக்கிறது. அதன் பதிவு செய்யப்பட்ட உயரம் 50 m (160 அடி) ஆகும். மேலும் இந்த அணை 1305 ஆம் ஆண்டில் ஒரு விபத்தில் அழியும் வரை அப்போது இருந்த அணைகளிலேயே மிக அதிக உயரம் கொண்டதாக இருந்திருக்கிறது.[12]

எஞ்சிய பாண்டு-இ-கேசர் அணை, ரோமனியர்களால் கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது

ரோமன் பொறியாளர்கள், பண்டைய நிலையான வடிவமைப்புகளான கரைகள் உயர்த்தப்பட்ட ஏரி அணைகள் மற்றும் கல் தட்டுகளால் பூசப்பட்ட புவி ஈர்ப்பு அணைகள் [13] போன்ற வழக்கமான அணைகளையும் பயன்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் மிகுந்த நுண்னறிவு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்னெனில் அணை கட்டமைப்பிற்கான அப்போது அறியப்படாத பல புதிய அடிப்படை வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தினார்கள். அவைகள் வளைவு-புவி ஈர்ப்புத் அணைகள்,[14] வளைவு அணைகள்,[15] பலமான கரைகள் கொண்ட அணைகள் [16] மற்றும் பல தட்டு கரைகள் கொண்ட அணைகள்,[17] இவை அனைத்தும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் அறியப்பட்டன மற்றும் பயன்படுத்தப்பட்டன. முதன் முதலில் ரோமானிய தொழிலாளர்கள் தான் அணைகட்டுப் பாலத்தை கட்டினர். எ. கா. ஈரானில் உள்ள வலேரியன் பாலம்.[18]

இடைக்காலம்

[தொகு]

நெதர்லாந்தில், கடல் மட்டதிலிருந்து தாழ்வான நிலப்பரப்பு கொண்ட நாடு, நீர் நிலைகளை கட்டுப்படுத்தவும் மற்றும் சதுப்பு நிலங்களுக்குள் கடல் நீர் நுழைவதைத் தடுக்கவும், நதிகளின் நீர் ஓட்டத்தை தடுக்கவும் பெரும்பாலும் அணைகள் பயன்படுத்தப்பட்டன. அத்தகைய அணைகள் பெரும்பாலும் ஒரு நகரம் அல்லது நகரின் தொடக்கத்தைக் குறிக்கின்றன, ஏனென்றால் அத்தகைய இடத்தில் ஆற்றைக் கடப்பது மிக் எளிதானது, மேலும் அத்தகைய நகரங்களுக்கு டச்சு மொழியில் பெயர்கள் வைக்கப் பெற்றது.

உதாரணமாக டச்சு தலைநகர் ஆம்ஸ்டர்டம் (பழைய பெயர் அமஸ்ரெடம்) 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆம்ஸ்டல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு அணை மூலம் தொடங்கியது, மற்றும் ராட்டர்டம் நகரம் ராட்டர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை மூலம் உருவாகியது. ஆம்ஸ்டர்டம் மத்திய சதுக்கத்தில், 800 ஆண்டுகளுக்கு முந்தைய அணை இருந்த உண்மையான பகுதி, இன்றும் டாம் சதுக்கம் அல்லது அணை என்றழைக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பெரிய அணைகள்

[தொகு]

தமிழகத்தில் உள்ள பெரிய அணைகள்

[தொகு]
  1. மேட்டூர் அணை,
  2. ஆத்துப்பாளையம் அணை [19]
  3. கல்லணை-தமிழரின் பெருமையை பறைசாற்றும் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது [20].
  4. வைகை அணை
  5. அமராவதி அணை
  6. மணிமுத்தாறு அணை
  7. பாபநாசம் அணை
  8. பேச்சிப்பாறை அணை
  9. பெருஞ்சாணி அணை
  10. பரம்பிக்குளம் அணை
  11. ஆழியாறு அணை
  12. பவானிசாகர் அணை
  13. சாத்தனூர் அணை
  14. நீரார் அணை
  15. சோலையாறு அணை
திருநெல்வேலி மாவட்ட அணைகள்
[தொகு]
  1. பாபநாசம் அணை - மொத்த கொள்ளளவு 143 அடிகள்
  2. சேர்வலாறு அணை - 156 அடிகள்
  3. மணிமுத்தாறு அணை - 118 அடிகள்
  4. குண்டாறு அணை
  5. வடக்கு பச்சையாறு அணை
  6. கொடுமுடியாறு அணை
  7. ராமநதி அணை - 84 அடிகள்
  8. கடனா நதி அணை - 85 அடிகள்
  9. அடவிநயினார் அணை
  10. கருப்பாநதி அணை - 72.10 அடிகள்

பொதுவான பயன்கள்

[தொகு]
செயல்பாடு விளக்கம்
மின்சார உற்பத்தி நீர் மின் ஆற்றல், இன்று உலகில் உள்ள பல நாடுகளுக்கு நீர் மின்சாரம் மட்டுமே பெரிய ஆதாரமாகவும் மற்றும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் உள்ளது. பல நாடுகளில் போதுமான நீர் ஓட்டம் கொண்ட ஆறுகள் உள்ளதால், மின் உற்பத்தி நோக்கங்களுக்காகவும் மற்றும் சிறந்த நீர் மேலாண்மைக்காகவும் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்படுகிறது. உதாரணமாக, தென் அமெரிக்காவில் உள்ள பரனா நதியின் குறுக்கே இடய்பு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் மூல்ம் சுமார் 14 GW மின்சாரம் உற்பத்தி செய்யப்ப்டுகிறது. மேலும் இந்த அணையின் மூலம் பராகுவே நாட்டிற்கு தேவையான 95% மின்சாரமும் மற்றும் பிரேசில் நாட்டிற்குத் தேவையான 20% மின்சாரமும் கிடைக்கிறது.
தண்ணிர் விநியோகம் பல நாடுகளில் அணைகளில் தடுக்கப்பட்டு சேமிக்கப்படும் நீர் பெரும்பாலும் விவாசய பாசனத்திற்கும், நகரங்கள், கிராமங்களின் குடிநீர் தேவைகளை பூரித்தி செய்யவும், மேலும் பருவ காலங்களில் பொழியும் ஆதிக மழை நீரை சேமிக்கவும், வெள்ள அபாயத்திலிருந்து நகரங்களையும், கிராமங்களையும் காக்கவும் அணைகள் உதவுகின்றன.
நீர் திசைதிருப்பல் நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, அல்லது பிற பயன்பாடுகளுக்கு நீரை திசை திருப்ப பயன்படுத்தப்படும் ஒரு சிறிய அணை பொதுவாக இதை தவிர வேறு பயன்பாடு இல்லை. அவ்வப்போது, நீர் ஓட்டத்தை அதிகரிக்கவும், குறிப்பிட்ட பகுதியில் நீரின் பயன்பாட்டை மேம்படுத்தவும் மற்றொரு வடிகால் அல்லது நீர்த்தேக்கத்திற்கு நீர் வழியமைக்க பயன்படுத்தப்படுகின்றது.
நீர் வழிப்போக்குவரத்து அணைகள் ஆழமான நீர்த்தேக்கங்களை உருவாக்குகின்றன மேலும் நீரோட்டத்தின் மாறுபடும் வேகத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக, ஆற்றின் ஆழத்தை மாற்றுவதன் மூலம், நீரின் மேல் ஓட்டம் மற்றும் கீழ் ஓட்டம் ஆகியவற்றை கட்டுபடுத்த இயலும். ஆழமான நீர் வழிப் பாதைகள் கொண்ட கால்வாய்களில் படகு போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும்.
  • வெள்ள அபாயத்தைக் குறைக்கிறது.
  • நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய உதவுகிறது.
  • விவசாயத் திற்கு தேவையான நீர்ப்பாசன திட்டங்களுக்கு பயன்படுகிறது.
  • குடி நீர் தேவைக்கான நீர் ஆதாரமாக விளங்குகிறது.

இடர்கள்

[தொகு]
  • பெரும்பாலான இடங்களில் காடுகள் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
  • நீர்த்தேக்கப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள், காட்டு விலங்குகளின் வாழிடம் அழிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Günther Garbrecht: "Wasserspeicher (Talsperren) in der Antike", Antike Welt, 2nd special edition: Antiker Wasserbau (1986), pp.51–64 (52)
  2. S.W. Helms: "Jawa Excavations 1975. Third Preliminary Report", Levant 1977
  3. 3.0 3.1 Günther Garbrecht: "Wasserspeicher (Talsperren) in der Antike", Antike Welt, 2nd special edition: Antiker Wasserbau (1986), pp.51–64 (52f.)
  4. 4.0 4.1 Mohamed Bazza (28–30 October 2006). "overview of the hystory of water resources and irrigation management in the near east region" (PDF). Food and Agriculture Organization of the United Nations. Archived from the original (PDF) on 8 August 2007. பார்க்கப்பட்ட நாள் 1 August 2007.http://www.fao.org/docrep/005/y4357e/y4357e14.htm
  5. "The reservoirs of Dholavira". The Southasia Trust. December 2008. Archived from the original on 11 July 2011. பார்க்கப்பட்ட நாள் 27 பிப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)http://old.himalmag.com/component/content/article/1062-the-reservoirs-of-dholavira.html பரணிடப்பட்டது 2016-08-21 at the வந்தவழி இயந்திரம்
  6. Govindasamy Agoramoorthy; Sunitha Chaudhary; Minna J. Hsu. "The Check-Dam Route to Mitigate India's Water Shortages" (PDF). Law library – University of New Mexico. Archived from the original (PDF) on 20 July 2013. பார்க்கப்பட்ட நாள் 8 November 2011.
  7. "This is the oldest stone water-diversion or water-regulator structure in the world" (PDF). Archived from the original (PDF) on 6 February 2007. பார்க்கப்பட்ட நாள் 27 May 2007.
  8. Singh, Vijay P.; Ram Narayan Yadava (2003). Water Resources System Operation: Proceedings of the International Conference on Water and Environment. Allied Publishers. p. 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7764-548-X. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09. {{cite book}}: Invalid |ref=harv (help)
  9. 9.0 9.1 Smith 1971, ப. 49
  10. Smith 1971, ப. 49; Hodge 1992, ப. 79f.
  11. Smith 1971, ப. 42
  12. Hodge 1992, ப. 87
  13. Hodge 2000, ப. 331f.
  14. Hodge 2000, ப. 332; James & Chanson 2002
  15. Smith 1971, ப. 33–35; Schnitter 1978, ப. 31f.; Schnitter 1987a, ப. 12; Schnitter 1987c, ப. 80; Hodge 2000, ப. 332, fn. 2
  16. Schnitter 1987b, ப. 59–62
  17. Schnitter 1978, ப. 29; Schnitter 1987b, ப. 60, table 1, 62; James & Chanson 2002; Arenillas & Castillo 2003
  18. Vogel 1987, ப. 50
  19. "இந்தியா: பெரிய அணைகள் தேசிய பதிவுகள் 2009" (PDF). இந்தியா : தமிழ் நாட்டில் உள்ள அணைகள். Archived from the original (PDF) on 2018-02-19. பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2011.
  20. "கல்லணை இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது". தி இந்து (The Hindu) (இந்தியா). ஆகத்து 29 – 2011 இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120717220026/http://www.thehindu.com/life-and-style/kids/article2408778.ece.  - ஆங்கிலத்தில்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dams
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணை&oldid=3927028" இலிருந்து மீள்விக்கப்பட்டது