அன்டன் சைலிங்கர்
அன்டன் சைலிங்கர் Anton Zeilinger | |
---|---|
பிறப்பு | 20 மே 1945 ரீடு இன்கிரைசு, ஆஸ்திரியா |
தேசியம் | ஆத்திரியர் |
துறை | இயற்பியல், குவாண்டம் இயங்கியல் |
பணியிடங்கள் | வியென்னா பல்கலைக்கழகம் இன்சுபுரூக் பல்கலைக்கழகம் மியூனிக் தொழிநுட்பப் பல்கலைக்கழகம் வியென்னா தொழிநுட்பப் பல்கலைக்கழகம் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் மெர்ட்டன் கல்லூரி, ஆக்சுபோர்டு |
கல்வி கற்ற இடங்கள் | வியென்னா பல்கலைக்கழகம் (பட்டப் படிப்பு, முனைவர்) |
ஆய்வேடு | ஒரு டை-ஒற்றைp படிகத்தில் நியூத்திரன் முனைவுநீக்க அளவீடுகள் (1972) |
ஆய்வு நெறியாளர் | எல்முட் ரவுச் |
அறியப்படுவது | குவாண்டம் தொலைப்பெயர்ச்சி பெல் மாதிரி சோதனைகள் எலிட்சர்–வைடுமேன் வெடிகுண்டுச் சோதனை கிரீன்பெர்கர்-ஓர்ன்–சைலிங்கர் நிலை GHZ பரிசோதனை மீ-அடர் குறியிடல் |
விருதுகள் | குளொப்சுடெக் நினைவு விருது (2004) ஐசாக் நியூட்டன் பதக்கம் (2007) இயற்பியல் வுல்ஃப் பரிசுகள் (2010) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2022) |
அன்டன் சைலிங்கர் (Anton Zeilinger; பிறப்பு: 20 மே 1945) ஆத்திரிய குவாண்டம் இயற்பியலறிஞரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார்.[1] சைலிங்கர் வியென்னா பல்கலைக்கழகத்தின் தகைமைப் பேராசிரியராகவும், ஆத்திரிய அறிவியல் கழகத்தின் குவாண்டம் ஒளியியல் மற்றும் குவாண்டம் தகவல் நிறுவனத்தின் மூத்த அறிவியலாளராகவும் பணியாற்றுகிறார்.[2] இவரது பெரும்பாலான ஆய்வுகள் குவாண்டம் பின்னலின் அடிப்படை அம்சங்கள் பற்றியதும், அதன் பயன்பாடுகள் பற்றியதும் ஆகும்.
2007 ஆம் ஆண்டில், "குவாண்டம் இயற்பியலின் அடித்தளத்திற்கு அவரது முன்னோடிக் கருத்தியலுக்காகவும், பரிசோதனைப் பங்களிப்புகளுக்காகவும்" இலண்டன் இயற்பியல் கழகத்தின் முதலாவது ஐசாக் நியூட்டன் பதக்கத்தை சைலிங்கர் பெற்றார். இது குவாண்டம் தகவல்களின் விரைவான வளர்ச்சிக்கான அடித்தளமாக மாறியது.[3][2] 2022 அக்டோபரில், "சிக்கலான போட்டான்கள் பற்றிய சோதனைகள் மூலம், பெல் சமனின்மைகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியலுக்கு ஆற்றிய பங்களிப்பு" ஆகிய ஆய்வுகளுக்காக அலைன் ஆசுபெக்ட், சான் கிளவுசர் ஆகியோருடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Nobel Prize in Physics 2022". NobelPrize.org. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022.
- ↑ 2.0 2.1 "Anton Zeilinger". www.nasonline.org. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022.
- ↑ "Anton Zeilinger scoops first Isaac Newton medal". Physics World. 3 October 2007. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022.
- ↑ Ahlander, Johan; Burger, Ludwig; Pollard, Niklas (4 October 2022). "Nobel physics prize goes to sleuths of 'spooky' quantum science" (in en). Reuters. https://www.reuters.com/world/aspect-clauser-zeilinger-win-2022-nobel-prize-physics-2022-10-04/.
வெளி இணைப்புகள்
[தொகு]- அன்டன் சைலிங்கர் on Nobelprize.org
- அன்டன் சைலிங்கர் publications indexed by Google Scholar
- Curriculum Vitae of Anton Zeilinger
- "Prof. Dr. Anton Zeilinger". Vienna Center for Quantum Science and Technology. Archived from the original on 17 April 2016. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016.
- Quantum Teleportation by Zeilinger, 2003 update of 2000 சயன்டிஃபிக் அமெரிக்கன் article
- Hans_Christian_von_Baeyer (17 February 2001). "In the beginning was the bit". New Scientist 169 (2278): 26–30. https://www.newscientist.com/article/mg16922784-300-in-the-beginning-was-the-bit/.
- Spooky action and beyond an interview with Anton Zeilinger at signandsight.com
- The lecture delivered by Professor Anton Zeilinger as the inaugural recipient of the Isaac Newton Medal, Institute of Physics, 17 June 2008, [1] (68 min 25 sec).
Note: On the page linked, a second video is accommodated which shows Professor Zeilinger speaking amongst others about his personal life. - Anton Zeilinger on the opening panel discussion at the Quantum to Cosmos festival at Perimeter Institute with காத்தரைன் பிரீசு, Leo Kadanoff, லோரன்சு எம். குரோசு, Neil Turok, Sean M. Carroll, Gino Segrè, Andrew White, and David Tong.
- Homepage of the International Academy Traunkirchen பரணிடப்பட்டது 2014-12-19 at the வந்தவழி இயந்திரம்
- Es stellt sich letztlich heraus, dass Information ein wesentlicher Grundbaustein der Welt ist பரணிடப்பட்டது 2004-11-15 at the வந்தவழி இயந்திரம், a German-language நேர்காணல் with Zeilinger by Andrea Naica-Loebell