இசிலா யாமி
இசிலா யாமி (Hisila Yami) (சூன் 25, 1959 காத்மாண்டு ) பார்வதி என்ற பெயரால் நன்கு அறியப்பட்ட நேபாள அரசியல்வாதியும், கட்டிடக் கலைஞரும் ஆவார். இவர் நேபாள நய சக்தியின் மத்திய குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், அனைத்து நேபாள மகளிர் சங்கத்தின் (புரட்சிகரம்) முன்னாள் தலைவரும் ஆவார்.
சுயசரிதை
[தொகு]இவர், நேபாள சமூக ஆர்வலரும், எழுத்தாளரும், அரசாங்கத்தில் துணை அமைச்சருமான தர்ம ரத்னா யாமி என்பவருக்கு மகளாக பிறந்தார். இவர், 1982 இல் இந்தியாவின் தில்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் இங்கிலாந்தில் உள்ள நியூகேஸில் அபுன் டைன் பல்கலைக்கழகத்திலிருந்து 1995இல் கட்டிட வடிவமைப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.இவர், சக மாவோயிஸ்ட் தலைவர் டாக்டர் பாபுராம் பட்டாராய் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மனுஷி என்ற ஒரு மகள் இருக்கிறார்.
பதவிகள்
[தொகு]பஞ்சாயத்து ஆட்சிக்கு எதிரான 1990 எழுச்சியின் போது, போராட்டங்களில் கலந்து கொண்ட மிக உயர்ந்த பெண் தலைவர்களில் இவரும் ஒருவர். இவர், 1981-1982 வரை அகில இந்திய நேபாள மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 1983 முதல் 1996 வரை புல்சோக் வளாகத்தில் பொறியியல் நிறுவனத்தில் விரிவுரையாளராக இருந்தார். 1995ஆம் ஆண்டில் இவர் அனைத்து நேபாள மகளிர் சங்கத்தின் (புரட்சிகரம்) தலைவராக ஆனார். அதில் இரண்டு வருட காலத்திற்கு சேவை செய்தார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைமையிலான நேபாள மக்கள் புரட்சியின் தொடக்கத்தில் இவர் 1996இல் தலைமறைவாக இருந்தார். 2001 முதல், இவர் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) மத்திய குழு உறுப்பினராக உள்ளார். மேலும்,அமைப்பின் சர்வதேச துறை போன்ற துறைகளில் பணியாற்றியுள்ளார்.
அரசாங்கத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையின் போது, சூன் 18, 2003 அன்று இவர் தனது முதல் பொதுத் தோற்றத்தை வெளியிட்டார். [1]
அமைச்சர்
[தொகு]ஏப்ரல் 1, 2007 அன்று இவர் நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தில் உடல் திட்டமிடல் மற்றும் வேலை அமைச்சராக சேர்ந்தார். [2] செப்டம்பர் முதல் திசம்பர் 2007 வரை அரசாங்கத்தின் மாவோயிஸ்ட் புறக்கணிப்பைத் தொடர்ந்து, திசம்பர் 31, 2007 அன்று இவர் மீண்டும் உடல் திட்ட அமைச்சராக பதவியேற்றார்.[3] 2008இல் நடந்த அரசியலமைப்பு சட்டமன்றத் தேர்தலில் காத்மாண்டு தொகுதி எண். 7லிருந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இவர் அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினரானார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் (மாவோயிஸ்ட்) தலைமையிலான அரசாங்கத்தில் செப்டம்பர் மாதம் சுற்றுலா மற்றும் பொது விமானப் போக்குவரத்து அமைச்சராக சேர்ந்தார்.
நயா சக்தி கட்சி
[தொகு]2015 இல், யாமியும் பட்டாராயும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (மாவோயிஸ்ட்) பிரிந்தனர். 2016ஆம் ஆண்டில், இவர்கள் நயா சக்தி கட்சியை நிறுவினர்.[4] மே 9, 2019 அன்று, நயா சக்தி, சமாஜ்பாடி கட்சியுடன் சேர நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்தது.[5] பின்னர், சமாஜ்பாடி கட்சி நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் ஒன்றிணைந்து ஜனதா சமாஜபாதி கட்சியை உருவாக்கியது.[6] 2020ஆம் ஆண்டின்படி, இவர் ஜனதா சமாஜ்பாடி கட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ [2]
- ↑ "Nepal swears in Maoist ministers", Al Jazeera, December 31, 2007.
- ↑ Mitra, Devirupa. "'We Did the Right Thing by Leaving Prachanda': Hisila Yami". The Wire. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ "Forum, Naya Shakti unify to form Samajwadi Party". OnlineKhabar. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ "Two key Madhesi parties in Nepal merge to form Janata Samajwadi Party". The Week. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ "JSP-N MP's abduction case a hot potato". The Himalayan Times. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- People’s Power in Nepal – Article in Monthly Review by Yami
- Turkish version of the article
- Comments by Yami in Monthly Review பரணிடப்பட்டது 2011-03-17 at the வந்தவழி இயந்திரம்
- Women's Participation in People's War in Nepal
- NPR Interview with Comrade Parvati
- http://nepalimahila.com/profile_hishila_yami.html[தொடர்பிழந்த இணைப்பு]