கிறித்துவின் திருஉடல், திருஇரத்தம் விழா
Appearance
கிறித்துவின் திருஉடல், திருஇரத்தம் விழா | |
---|---|
கிறித்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா நற்கருணை பவனி. | |
கடைபிடிப்போர் | கத்தோலிக்க திருச்சபை. ஆசுதிரியா, பிரேசில், பொலிவியா, பொசுனியா எர்செகோவினா, கொலம்பியா, குரோவாசியா, டொமினிக்கன் குடியரசு, எயிட்டி, கிழக்குத் திமோர், ஜெர்மனி, பெரு, மொனாக்கோ, பனாமா, போலந்து, சான் மரீனோ, எசுப்பானியா, சுவிட்சர்லாந்து, கிரெனடா, செயின்ட் லூசியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளில் விடுமுறை நாள். |
நாள் | மூவொரு இறைவன் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் வியாழன்; உயிர்ப்பு ஞாயிறுக்கு 60 நாட்களுக்கு பிறகு |
2023 இல் நாள் | சூன் 8 |
2024 இல் நாள் | மே 30 |
2025 இல் நாள் | சூன் 19 |
2026 இல் நாள் | சூன் 4 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
கிறித்துவின் திருஉடல், திருஇரத்தம் விழா (ஆங்கில மொழி: Most holy Body and Blood of Christ; இலத்தீன்: Corpus Christi) என்பது நற்கருணையில் இயேசு கிறித்துவின் உடனிருப்பை, அதாவது அவரது திருஉடலும், திருஇரத்தமும் அடங்கியிருக்கும் மறைபொருளைக் கொண்டாடும் விழா ஆகும். உயிர்ப்பு ஞாயிறுக்கு 60 நாட்கள் கழித்து, அதாவது மூவொரு இறைவன் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமை கத்தோலிக்க திருச்சபையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.[1][2] இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில், தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sanctissimi Corpus et Sanguis Christi." Roman Missal, 2011 Latin to English translation
- ↑ "Mershman, Francis. "Feast of Corpus Christi." The Catholic Encyclopedia. Vol. 4. New York: Robert Appleton Company, 1908. 17 Jun. 2013". Newadvent.org. பார்க்கப்பட்ட நாள் 2014-01-23.