Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

சொங்குடு யுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொங்குடு யுத்தம்
மங்கோலிய-சின் போர்களின் ஒரு பகுதி

சொங்குடு (நவீன பெய்ஜிங்) முற்றுகை. ரசித்-அல்-தின் அமாதனி எழுதிய பாரசீக நூலான சமி அல்-தவரிக்கில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி.
நாள் 1215
இடம் பெய்ஜிங், சீனா
மங்கோலிய வெற்றி
பிரிவினர்
மங்கோலியப் பேரரசு சின் அரசமரபு
தளபதிகள், தலைவர்கள்
செங்கிஸ் கான் சுவான்சோங்
பலம்
தெரியவில்லை 6,000
இழப்புகள்
தெரியவில்லை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்

சொங்குடு யுத்தம் (தற்கால பெய்ஜிங்) என்பது 1215 ஆம் ஆண்டு மங்கோலியர்களுக்கும் மற்றும் வடக்கு சீனாவைக் கட்டுப்படுத்திய சுரசன் சின் அரசமரபுக்கும் இடையே நடைபெற்ற ஒரு யுத்தம் ஆகும்.[1] இந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் வெற்றி பெற்றனர். சீனாவை வெல்லும் தங்களது படையெடுப்பை தொடர்ந்தனர்.

வரலாறு

[தொகு]

1211 ஆம் ஆண்டு மங்கோலியர்கள் மற்றும் சின் அரசமரபுக்கு இடையிலான போரின் தொடக்கத்தை குறித்தது. போரின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சின் அரசமரபானது, செங்கிஸ் கான் (தெமுசின்) மற்றும் அவரது மங்கோலிய இராணுவத்தை எதிர்த்து தாக்கு பிடித்தது.

அத்தகைய நேரம் முழுவதும் தெமுசின் தனது படைகளை தொடர்ந்து பெரிதாக்கினார். 1213ஆம் ஆண்டு சீனப் பெருஞ் சுவர் வரை இருந்த சின் அரசமரபின் அனைத்து பகுதிகளையும் வெல்லும் அளவுக்கு அவரது ராணுவம் சக்தி வாய்ந்ததாக உருவானது. இந்த முக்கியமான இடத்தில் தனது படைகளை மூன்று சிறிய பிரிவுகளாகப் பிரிக்கும் முடிவை தெமுசின் எடுத்தார். இம்முடிவின் மூலம் சீன பெருஞ்சுவரை தாண்டி வடக்கு சீனாவை வெல்லும் முயற்சியை மேற்கொண்டார். தெமுசின் தனது தம்பி கசர் தலைமையில் ஒரு ராணுவப் பிரிவை கிழக்கு நோக்கி மஞ்சூரியாவிற்கு அனுப்பினார். மற்றொரு ராணுவப் பிரிவை தனது முதல் மூன்று மகன்களின் தலைமையில் தெற்கே சான்சியை நோக்கி அனுப்பினார். மூன்றாவது இராணுவப் பிரிவுக்கு தானே தலைமை தாங்கி தனது கடைசி மகன் டொலுயுடன் சாண்டோங்கை நோக்கி முன்னேறினார். இந்தத் திட்டமானது வெற்றியில் முடிந்தது. அனைத்து ராணுவங்களும் வெவ்வேறு இடங்களில் சீன பெருஞ்சுவரை கடந்தன.

இவர் லிஸ்னர் என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி, முற்றுகையிடப்பட்ட குடிமக்கள் தங்களது பீரங்கிகளில் பயன்படுத்த போதிய உலோகங்கள் இல்லாத காரணத்தால் தங்கம் மற்றும் வெள்ளியை உலோகங்களுக்கு பதிலாக பயன்படுத்தினர்.[2][3][4]

பெய்ஜிங்கிற்கான யுத்தமானது நீண்டதாகவும் அலுப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. இறுதியாக ஜூன் 1, 1215 ஆம் ஆண்டு மங்கோலியர்கள் நகரத்தை கைப்பற்றினர். தாங்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நிரூபித்தனர்.[5] நகர மக்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக சின் பேரரசர் சுவான்சோங் தனது தலைநகரத்தை தெற்கே கைபெங்கிற்கு மாற்ற கட்டாயப்படுத்தப்பட்டார். இதன் மூலமாக மஞ்சள் ஆற்று பள்ளத்தாக்கானது மேலும் மங்கோலிய அழிவிற்கு திறந்துவிடப்பட்டது. 1232ஆம் ஆண்டு நடைபெற்ற முற்றுகைக்கு பிறகு கைபெங்கும் மங்கோலியர்களிடம் வீழ்ந்தது.

உசாத்துணை

[தொகு]
  1. Tony Jaques (2007). Dictionary of Battles and Sieges: A-E. Greenwood Publishing Group. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-33537-2.
  2. Ivar Lissner (1957). The living past (4 ed.). Putnam's. p. 193. பார்க்கப்பட்ட நாள் 23 April 2012.
  3. Wolter J. Fabrycky; Paul E. Torgersen (1966). Operations economy: industrial applications of operations research (2 ed.). Prentice-Hall. p. 254. பார்க்கப்பட்ட நாள் 23 April 2012.
  4. Wolter J. Fabrycky; P. M. Ghare; Paul E. Torgersen (1972). Industrial operations research (illustrated ed.). Prentice-Hall. p. 313. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-464263-5. பார்க்கப்பட்ட நாள் 23 April 2012.
  5. "What happened on June 1". Dates in History. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொங்குடு_யுத்தம்&oldid=3437474" இலிருந்து மீள்விக்கப்பட்டது