Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

டைட்டன் ஆரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைட்டன் ஆரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தாவரம்
தரப்படுத்தப்படாத:
ஆஞ்சியோஸ்பெர்மம்
தரப்படுத்தப்படாத:
மோனோகாட்டுகள்
வரிசை:
அலிஸ்மெடாலெஸ்
குடும்பம்:
அரசீயெ
துணைக்குடும்பம்:
அரோய்டீயெ
சிற்றினம்:
தாம்சொனீயெ
பேரினம்:
அமார்ஃபோஃபாலஸ்
இனம்:
A. டைட்டனம்
இருசொற் பெயரீடு
அமார்ஃபோஃபாலஸ் டைட்டனம்
(Becc.) Becc. ex Arcang

டைட்டன் ஆரம் (Titan arum) அல்லது அமார்ஃபோஃபாலஸ் டைட்டனம் (Amorphophallus titanum) (பண்டைய கிரேக்கம் அமார்ஃபோஸ் என்றால் "உருவாகாத, நடக்காத" என்று பொருளாகும். ஃபாலஸ், டைட்டன் என்பன "பெரிய" என்று பொருள்தரும் சொற்கள்) என்பது உலகின் மிகப்பெரியப் பூக்களைக் கொடுக்கும் கிளையிலாத் தாவரமாகும். (மிகப்பெரிய ஒற்றைப்பூ தரும் தாவரம் இரஃப்லேசியா அர்னால்டி); மிகப்பெரிய பூ தரும் கிளைக்கும் இராச்சியம் தாலிபோட் பனை சார்ந்த காரிஃபா அம்ப்ராகுலிஃபெரா ஆகும்). இது இரஃப்லேசியா அர்னால்டியைப் போல தனித்த மலரைத் தருவதில்லை. மாறாக பூந்துணரைத் (Inflorescence) தருகிறது.

இந்த மலரின் மணம் அழுகிய விலங்கின் மணத்தினை ஒத்திருக்கும்.[1] டைட்டன் ஆரம் பிண மலர் (corpse flower) என்றும் அழைக்கப்படும். இது இந்தோனேசியாவின் மழைக்காடுகளில் காணப்படுகிறது. இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை.

விளக்கம்

[தொகு]

இது ஒரு செடி. என்றாலும் மரம்போல 20 அடி உயரம்வரை வளரும். கிளைகளுடனும், இலைகளுடன் 15 அடி அகலத்துக்கு குடைபோல அகன்று இருக்கும். இது தன் இலைகளின் மூலமாக ஒளிச்சேர்க்கை செய்து பூப்பதற்கு தேவையான ஆற்றலை தண்டில் சேமித்துவைத்துக் கொள்ளும். இச்செடி வளர்ந்த 12 முதல் 18 மாதங்களில் இலைகள் மடிந்து செடியும் செயலற்ற தன்மைக்குச் சென்றுவிடும். இச்சமயத்தில் இது இலைகள் கிளைகள் அற்ற மரம்போல காணப்படும். தாவரம் செயலற்ற தன்மையில் இருக்கும்போது சுமார் 100 கி.கி எடையுள்ள மிகப்பெரிய பாளைத் தண்டு உருவாகும். பின்னர் தண்டில் இருந்து மொட்டு உருவாகிறது. இந்த மொட்டு விரைவாக வளர்ந்து, பூவாக மலருகிறது. உலகிலேயே பெரிய மலர் என்ற பெயர் பெற்ற இம்மலர் தன்மகரந்தச் சேர்க்கை செய்துகொள்வதில்லை. ஆனாலும் இம்மலரிலிருந்து வீசும் பிணவாடை காடுகளில் இறந்த விலங்குகளில் ஒட்டியுள்ள வண்டுகளையும், வியர்வை ஈக்களையும் கவருவதின் மூலம் அயல் மகரந்த சேர்க்கையை நடத்திக்கொள்கிறது. இப்பூ மலர்ந்த பின்னர் 24 மணி நேரத்தில் வாடிவிடுகிறது. இதன் பிறகு செடியின் பாளைத் தண்டில் இருந்து பெர்ரியின் தோற்றத்தை ஒத்த கனிகள் உருவாகின்றன. இந்தக் கனிகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என படிப்படியாக நிறமாற்றம் அடைந்து பழுக்கின்றன. இந்தக் கனிகளை இருவாய்ச்சி போன்ற பறவைகள் உண்டு இதன் விதைகளை பரப்புகின்றன. இந்த விதைகள் வழியாக புதிய செடிகள் முளைக்கின்றன. இதன் செடியில் இருந்து இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூ உருவாகிறது. ஒரு செடியானது நான்கு முதல் ஆறு பூக்கள் பூத்தபிறகு மடிந்துவிடும்.

படக் காட்சியகம்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amorphophallus titanum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைட்டன்_ஆரம்&oldid=3840105" இலிருந்து மீள்விக்கப்பட்டது