தொல் தாவரவியல்
Appearance
தொல் தாவரவியல் என்பது தாவரவியலின் ஒரு பிரிவு. இது தாவரங்களின் வரலாறு, அவற்றின் தோற்றம், வளர்ச்சி அவற்றின் அழிவு போன்றவற்றை நிலவியல் மற்றும் தொல்லியல் நோக்கில் விளக்குகிறது.[1] தொல் தாவரவியலில் பாசிகள், பூஞ்சைகள், பெரணித் தாவரங்கள், விதைத் தாவரங்கள் பற்றி அதிகம் காணலாம். தாவரங்களின் இலைகள், தண்டுகள், பழங்கள் இவற்றின் ஏதாவது படிமங்களின் மூலம் அத்தாவர இனத்தைப் பற்றியும் அவற்றின் சூழலியல் வரலாற்றினையும் அறியலாம்.[2]
நோக்கம்
[தொகு]- தொல் படிமத் தாவரங்கள் பற்றி மொத்தத் தொகுப்பை வரையறுக்க
- அத்தாவரங்கள் எந்த வகைப்பாட்டினைச் சேர்ந்தவை என்பதை அறிய
- அத்தாவரங்களின் பரிணாம வளர்ச்சியினை அறிய
சிறப்பு வகைத் தொல் படிமங்கள்
[தொகு]டையாடம்ஸ் எனும் இருகலப்பாசிகள் சிலிக்காவினால் ஆன செல்களால் ஆனவை. இவை ஒரு செல்லினால் ஆன பாசிகள். இவற்றின் செல்கள் அழி்ந்து அவை ஒன்றிணைந்து பாறை போன்ற அமைப்பாக மாறுகின்றன. அவை 'டையாடமைட் என அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cleal, Christopher J.; Lazarus, Maureen; Townsend, Annette (2005). "Illustrations and illustrators during the 'Golden Age' of palaeobotany: 1800–1840". In Bowden, A. J.; Burek, C. V.; Wilding, R. (eds.). History of palaeobotany : selected essays. London: Geological Society of London. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781862391741.
- ↑ Paleobotany Blog