Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

படைச்சிறுத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய புள்ளிச் சிறுத்தை
Clouded leopard [1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேந்தெரினே
பேரினம்:
நியோபெலிசு
இனம்:
நி. நெபுலோசா
இருசொற் பெயரீடு
நியோபெலிசு நெபுலோசா
(கிரிப்த், 1821)
படைச்சிறுத்தை காணப்படும் இடங்கள்
வேறு பெயர்கள்

பெலிசு மாக்ரோசெலிசு
பெலிசு மார்மோடா

பெரிய புள்ளிச் சிறுத்தை அல்லது படைச்சிறுத்தை (clouded leopard) என்பது பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இமயமலை அடிவாரப் பகுதியில் இருந்து சீனாவரை உள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இவ்விலங்கை அழியவாய்புள்ள இனமாக 2008ஆம் ஆண்டு அறிவித்தது. இதன் மொத்த எண்ணிக்கை 1,0000 என்ற எண்ணிக்கையில் இருந்து மிக வேகமாக குறைந்து வருவதாக கருதப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கை 1000வரை குறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..[2] இவை பெரிய பூனைகள் மற்றும் சிறிய பூனைகள் இனம் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக கருதப்படுகிறது[3] இது பெரிய பூனைகளை சிறிது ஒத்துள்ளதது ஆனால் சிறுத்தையுடன் நெருக்கமான தொடர்பு இல்லை.[4] இவ்விலங்கு மேகாலயத்தின் மாநில விலங்காகும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

1821இல் எட்வர்ட் கிரிபித் என்பவரால் பெலிசு நெபுலோசா எனும் பெயர் முன்மொழியப்பட்டது. கிரிப்த் முதலில் சீனாவின் கான்டன் மாகாணத்திலிருந்து இலண்டனில் உள்ள எக்ஸெட்டர் எக்ஸ்சேஞ்சில் உள்ள மிருகக்காட்சிசாலைக்கு உயிருடன் கொண்டு வரப்பட்ட படைச்சிறுத்தையின் தோலை விவரித்தார்.[5] 1841ஆம் ஆண்டில் பிரையன் ஹொக்டன் ஹோட்சன் என்பவரால் முன்மொழியப்பட்ட பெலிசு மேக்ரோசெலாய்டுகள் நேபாளத்திலிருந்து வந்த ஒரு படைச்சிறுத்தை மாதிரியாகும்.[6][7] 1862-ல் இராபர்ட் சுவின்ஹோவால் முன்மொழியப்பட்ட பெலிசு பிராச்சியுரா தைவானில் இருந்து வந்த படைச்சிறுத்தை தோல் ஆகும்.[8] நியோபெலிசு என்ற பொதுவான பெயர் ஜான் எட்வர்ட் கிரே என்பவரால் 1867-ல் முன்மொழியப்பட்டது, அவர் இந்த மூன்றையும் இந்த இனத்திற்கு கீழ்ப்படுத்தினார்.[9] தற்போது, ​நி. நெபுலோசா ஒரு ஒற்றை வகை சிற்றினமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் துணைசிற்றினத்திற்கான ஆதாரங்கள் இல்லை.[10]

1823ஆம் ஆண்டில் ஜார்ஜஸ் குவியரால் முன்மொழியப்பட்ட பெலிசு டியார்டி ஜாவாவிலிருந்து பெறப்பட்ட படைச்சிறுத்தை தோலை அடிப்படையாகக் கொண்டது.[11] 1917-ல் ரெஜினால்ட் இன்னசு போகாக் என்பவரால் இது படைச்சிறுத்தையின் துணையினமாகக் கருதப்பட்டது.[12] 2006-ல், இது ஒரு தனித்துவமான நியோபெலிசு சுண்டா படைச் சிறுத்தை என அடையாளம் காணப்பட்டது.[13][14] தைவான் மற்றும் ஹைனான் தீவில் உள்ள மக்கள் படைசிறுத்தைகள் பிரதான நிலப்பகுதியைச் சேர்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன.[10]

பண்புகள்

[தொகு]
பெரிய புள்ளிச் சிறுத்தையின் முகம்

சாதாரண சிறுத்தையைவிட இந்த சிறுத்தை அளவில் சிறியதாகும். இவற்றின் வால் மிக நீண்டு இருக்கும். உடலில் கருமையான வட்டப்பட்டைகளும், பட்டைகளுக்கு இடையே மங்கலான இடைவெளியும் இருப்பதால் இது இப்பெயர் பெற்றது. இதன் தலையில் புள்ளிகளும், முகத்தில் பட்டைகளும் காணப்படும். வயிற்றிலும், கால்களிலும் முட்டைவடிவ பெரிய கரிய புள்ளிகளும், வாலில் சாம்பல் நிற வளையங்களும் இருக்கும்.பெண் விலங்கு ஆணைவிட சற்று சிறியதாக இருக்கும்.[4] இந்த சிறுத்தைப்புலியின் எடை 11.5 இல் இருந்து 23 கிலோ (25 மற்றும் 51 பவுண்ட்) இருக்கும். பெண் சிறுத்தைகள் தலை முதல் உடல் வரை 68.6 - 94 செமீ (27.0 to 37.0 அங்குலம்) நீளமும் வால் 61 82 செமீ (24 32 அங்குலம்) நீளம் கொண்டது. ஆண் சிறுத்தைகள் தலையில் இருந்து உடல்வரை நீளம் 81இல் இருந்து 108 செ.மீ (32-43 அங்குலம்) (43 32) நீளமும் வால் 74 முதல் 91 செமீ (29 - 36 அங்குலம்) நீளம் கொண்டது.[15] இவற்றின் தோள் உயரம் 50 இல் இருந்து 55 செமீ (20 to 22 அங்குலம்) வரை வேறுபடுகிறது. [16] இந்த சிறுத்தைப்புலிகள் 1860 க்கு பிறகு நேபாளத்தில் அழிந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் 1987 மற்றும் 1988 ல், நான்கு சிறுத்தைகள் நாட்டின் மத்திய பகுதியா சிட்வான் தேசிய பூங்கா மற்றும் போகற பள்ளத்தாக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்புக்குப் பின் அவை இந்த மிதவெப்ப மண்டல காட்டில் வளர்த்து இனப்பெருக்கம் செய்ய வழிவகை செய்ததால், இவை மேற்கே தங்கள் இனத்தை பெருக்கி எல்லைகளை விரிவாக்கிக் கொண்டது. [17] தற்போது இவற்றில் மூன்று கிளையினங்கள் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வார்ப்புரு:MSW3 Carnivora
  2. 2.0 2.1 Sanderson, J., Khan, J. A., Grassman, L. & Mallon, D. P. (2008). "Neofelis nebulosa". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. Hemmer, H. (1968). "Untersuchungen zur Stammesgeschichte der Pantherkatzen (Pantherinae) II: Studien zur Ethologie des Nebelparders Neofelis nebulosa (Griffith 1821) und des Irbis Uncia uncia (Schreber 1775)". Veröffentlichungen der Zoologischen Staatssammlung München 12: 155–247. https://archive.org/stream/verfentlichungen121968zool#page/n209/mode/2up. 
  4. 4.0 4.1 Pocock, R.I. (1939). The Fauna of British India, including Ceylon and Burma. Mammalia. – Volume 1. Taylor and Francis, Ltd., London. Pp 247–253
  5. Griffith, E. (1821). "The Chinese, or tortoiseshell Tiger. Felis nebulosa". General and particular descriptions of the vertebrated animals arranged comfortably to the modern discoveries and improvements in zoology. London: Baldwin, Cradock & Joy. p. 37.
  6. Hodgson, B. H. (1841). "Classified Catalogue of Mammals of Nepal". Calcutta Journal of Natural History and Miscellany of the Arts and Sciences in India IV: 284–294. https://books.google.com/books?id=oYg5AAAAcAAJ&pg=PA286. 
  7. Hodgson, B. H. (1853). "Felis macrosceloides". Proceedings of the Zoological Society of London I. Mammalia: Plate XXXVIII. https://archive.org/stream/proceedingsofzoo001zool#page/n83/mode/2up. 
  8. Swinhoe R. (1862). "On the mammals of the Island of Formosa (China)". Proceedings of the Zoological Society of London 30: 347–365. doi:10.1111/j.1469-7998.1862.tb06539.x. https://archive.org/details/proceedingsofgen62zool/page/352. 
  9. Gray, J. E. (1867). "Notes on the skulls of cats (Felidae)". Proceedings of the Zoological Society of London 35: 258–277. 
  10. 10.0 10.1 Kitchener, A. C.; Breitenmoser-Würsten, C.; Eizirik, E.; Gentry, A.; Werdelin, L.; Wilting, A.; Yamaguchi, N.; Abramov, A. V. et al. (2017). "A revised taxonomy of the Felidae: The final report of the Cat Classification Task Force of the IUCN Cat Specialist Group". Cat News (Special Issue 11): 64–66. https://repository.si.edu/bitstream/handle/10088/32616/A_revised_Felidae_Taxonomy_CatNews.pdf?sequence=1&isAllowed=y#page=67. 
  11. Cuvier, G. (1823). "Des ossemens des grands Felis". Recherches sur les ossemens fossiles : où l'on rétablit les caractères de plusieurs animaux dont les révolutions du globe ont détruit les espèces. Volume IV: Les ruminans et les carnassiers fossiles. Paris: G. Dufour & E. d'Ocagne. pp. 407−456.
  12. Pocock, R. I. (1917). "The classification of existing Felidae". The Annals and Magazine of Natural History: Including Zoology, Botany, and Geology. 8th 20 (119): 329–350. doi:10.1080/00222931709487018. https://archive.org/stream/annalsmagazineof8201917lond#page/343/mode/1up. 
  13. Buckley-Beason, V. A.; Johnson, W. E.; Nash, W. G.; Stanyon, R.; Menninger, J. C.; Driscoll, C. A.; Howard, J.; Bush, M. et al. (2006). "Molecular evidence for species-level distinctions in clouded leopards". Current Biology 16 (23): 2371–2376. doi:10.1016/j.cub.2006.08.066. பப்மெட்:17141620. 
  14. Kitchener, A. C.; Beaumont, M. A.; Richardson, D. (2006). "Geographical variation in the clouded leopard, Neofelis nebulosa, reveals two species". Current Biology 16 (23): 2377–2383. doi:10.1016/j.cub.2006.10.066. பப்மெட்:17141621. 
  15. Sunquist, M.; Sunquist, F. (2002). Wild cats of the World. Chicago: University of Chicago Press. pp. 278–284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-77999-8.
  16. Clouded leopard SSP (2000). Clouded leopard (Neofelis nebulosa) Husbandry Guidelines. American Zoo and Aquarium Association.
  17. Dinerstein, E. and J. N. Mehta (1989). The clouded leopard in Nepal. Oryx 23(4): 199–201.
  18. Sunquist, M. E., Sunquist, F. (2009). Family Felidae (Cats) In: Wilson, D. E., Mittermeier, R. A. (eds.) Handbook of the Mammals of the World - Volume 1 Carnivores. Lynx Edicions in association with Conservation International and IUCN. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-49-1


"https://ta.wikipedia.org/w/index.php?title=படைச்சிறுத்தை&oldid=3849286" இலிருந்து மீள்விக்கப்பட்டது