Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

மியான்மரில் பெளத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மியான்மரில் பின்பற்றப்படும் பெளத்தமதத்தில் மிக முதன்மையானதாக இருப்பது தேரவாத பௌத்தம் என்ற பாரம்பரிய முறையாகும்.[1][2] மியான்மர் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களில் 89% பேர் இந்த மரபு வழியை தான் பின்பற்றுகின்றனர்.[1][3] மியான்மர் ஒரு மிகச்சிறந்த புத்த ஆன்மீக நாடு ஏனென்றால் அங்கு அதிக விகிதாச்சாரத்தில் புத்தமத துறவிகளும் மற்றும் ஆன்மீகத்திற்காக அவர்கள் செலவிடும் தொகையும் மிக அதிகமாகும்.[4] மேலும் பர்மிய சமுதாயத்தில் ஷான், ராகினி, மோன், கரேன், ஸோ மற்றும் சீனர்கள் ஆகியோர் புத்த சமயத்தோடு நன்கு இணைந்திருக்கிறார்கள் . மியான்மரில் பல இனக்குழுக்களில், சங்ஹா என்றழைக்கப்படும் சங்ஸ், பாமர் மற்றும் ஷான் உள்ளிட்ட அனைத்து மக்களும் பர்மிய பாரம்பரியத்தோடு இணைந்து வாழகிறார்கள்.

மியான்மரில் உள்ள பௌத்தர்களின் தினசரிப் பணிகளைப் பொறுத்தவரையில் இரண்டு பிரபலமான நடைமுறைகள் உள்ளன: தகுதி -உருவாக்குதல் மற்றும் விபாசனம். வெஸ்சா பாதை சிறிதளவே பிரபலமானது; இது ஆச்சர்யங்களை எதிர்பார்க்கும் புத்த பிட்சுகளுக்கு ஏதுவான ஒரு இணைந்த வடிவம் ஆகும்.[5]

தகுதி-உருவாக்குதல் பர்மிய பெளத்தர்களால் மேற்கொள்ளப்படும் பொதுவான வழிகளாகும். இதன் நோக்கம் விருப்பமான அல்லது நல்ல சாதகமான மறுபிறப்பை பின்வரும் வழிகளில் அடைவது. ஐந்து நல் வழிகளை கடைபிடிப்பது, நல்லொழுக்கங்கள் மற்றும் நல்ல செயல்களால் (தானா) நல்ல குணநலன்களைக் கொண்டுவருவதும் இந்த பாதையில் அடங்கும்.

விபாசனம் 1900 களின் தொடக்கத்தில் பர்மிய பெளத்தர்களிடையே பிரபலமான பாதையாகும், ஆழ்ந்த தியானத்தின் மூலம் நல்ல ஞானத்தை அடைய வழிவகுக்கும் என நம்பப்படும் ஒரு வடிவமாகும்.

வெஸ்சா பாதை ஆச்சர்யங்களும் இரகசியங்களும் நிறைந்த இயல்பான நடைமுறைகள் இல்லாத (மந்திரங்கள் ஜெபிப்பது, சமாதா மற்றும் இரசவாதம் இன்னும் பிற) பாதையாகும். எதிர்கால புத்தரின் மைத்ரேயா (அறிமத்தேயா) தோற்றத்திற்கு காத்திருக்கும் ஒரு முற்றிலும்-அழியாத மற்றும் இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.[6]

வரலாறு

[தொகு]
18 ஆம் நூற்றாண்டின் லோகாநதா
ஒரு புத்தப் பிட்சு (எ.கா.) (1795)

மியான்மரில் பௌத்தத்தின் வரலாறு இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. 1834 இல் பின்யாசாமி எழுதிய சசானா வம்சா (பர்மியத் ததானா வின்) என்ற நூலில், மியான்மரில் பௌத்த மதத்தின் வரலாற்றை பற்றி சுருக்கிக் கூறுப்பட்டுள்ளது. மஹாவம்சாவின் படி, இலங்கையில் ஐந்தாம் நூற்றாண்டு பாலி வரலாற்றுக்கூற்றின் படி, பேரசர் அசோகர், புத்த மதத்தை பரப்புவதற்காக இரண்டு புத்த பிட்சிக்களை (சோனா, உத்தாரா) ஆகியோரை ஸ்வர்ணபூமிக்கு கி.மு. 228 இல் புனித நூல் மற்றும் பிற புத்தகங்களுடன் அனுப்பியதாக வரலாறு உள்ளது.

3 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு ஆந்திர இக்சுவகு கல்வெட்டு, கிரத்தாஸ்சை பௌத்த மதத்திற்கு மாற்றுவதைக் குறிக்கிறது, மேலும் திபெத்திய-பர்மன் பேசும் மக்களை மியன்மார் மக்கள் என்றும் கருதப்படுகின்றது.[7] இதே காலத்தில் ஆரம்பகால சீன நூல்கள் லியு-யாங் இராச்சியம் பற்றிப் பேசுகின்றன, அங்கு வாழ்ந்த மக்கள் எல்லோரும் புத்தர் வழிபாடு செய்தனர் மற்றும் பல ஆயிரம் சாமனாஸ் இருந்தனர். இந்த இராச்சியம் மத்திய பர்மாவில் ஏதோ ஒரு பகுதியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. பாலி, சமஸ்கிருதம், பியு மற்றும் மோன் மொழிகளில் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டு சம்பந்தபட்ட தொடர் கல்வெட்டு பதிவுகள் மத்திய மற்றும் கீழ் பர்மாவில் (பியா மற்றும் யாங்கோன்) பகுதிகளில்லிருந்து மீட்கப்பட்டுள்ளன. 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை, பாமர் அரசர்கள் மற்றும் பாகன் இராச்சியத்தை சேர்ந்த அரசிகளும் எண்ணற்ற தூபிகளையும், கோயில்களையும் கட்டியிருக்கிறார்கள்.

பாரம்பரியம்

[தொகு]

மியான்மரின் கலாச்சாரம் அதன் பௌத்தமதத்திற்கு ஒத்ததாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் பல பர்மிய திருவிழாக்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பெளத்தத்துடன் தொடர்புடையவை.[8]

பர்மிய புத்தாண்டு, தியாங்கன், நீர் விழா என்று அழைக்கப்படும் இந்த விழாவானது இந்து சமயத்தில் இருந்து உருவானது என்று கூறுவர், மேலும் பல பர்மிய சிறுவர்கள் சேர்ந்து கொண்டாடும் சின்பியு விழா, இந்த சிறப்புச் சடங்கில் சிறுவர்கள், சாமனரியாக சிறிது காலத்திற்கு கியாங்கில் வசிப்பது. இது போன்று பல விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "The World Factbook". Archived from the original on 2018-01-17. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09.
  2. "Burma—International Religious Freedom Report 2009". U.S. Department of State. 26 October 2009. பார்க்கப்பட்ட நாள் 11 November 2009.
  3. "Burma—International Religious Freedom Report 2009". U.S. Department of State. 26 October 2009. பார்க்கப்பட்ட நாள் 11 November 2009.
  4. Cone & Gombrich, Perfect Generosity of Prince Vessantara, Oxford University Press, 1977, page xxii
  5. Pranke, Patrick A (2013), Myanmar, Encyclopedia of Buddhism, Macmillan Reference USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865718-7
  6. Ferguson, John P.; E. Michael Mendelson (1981). Masters of the Buddhist Occult: The Burmese Weikzas. Essays on Burma. Brill Archive. pp. 62–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-06323-5.
  7. Sylvain Lévi, "Concept of Tribal Society" in Pfeffer, Georg; Behera, Deepak Kumar, eds. (2002). Concept of tribal society. New Delhi: Concept Pub. Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170229834.
  8. "Introducing Myanmar Festivals". Yangon City Development Committee. Archived from the original on 14 June 2012. பார்க்கப்பட்ட நாள் 9 June 2007.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியான்மரில்_பெளத்தம்&oldid=3717207" இலிருந்து மீள்விக்கப்பட்டது