முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
Appearance
முகம்மத் ரேசா ஷா பகலவி محمد رضا شاه پهلوی | |
---|---|
முகமது ரேசா ஷா பகலவி | |
ஈரான் நாட்டின் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | 26 செப்டம்பர் 1941 – 11 பெப்ரவரி 1979 (37 ஆண்டுகள், 138 நாட்கள்) |
முடிசூட்டுதல் | 26 அக்டோபர் 1967 | (அகவை 48)
பிறப்பு | 26 அக்டோபர் 1919 |
இறப்பு | 27 சூலை 1980 | (அகவை 60)
மரபு | பகலவி வம்சம் |
முகமது ரேசா ஷா பகலவி (பாரசீக மொழி:محمد رضا شاه پهلوی) (அக்டோபர் 26, 1919 - சூலை 27, 1980), பகலவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும், ஈரான் நாட்டின் கடைசி அரசரும் ஆவார். 1979 ஆண்டில் நடைபெற்ற ஈரானியப் புரட்சியின் போது இவரது ஆட்சி வீழ்ந்தது.[1] அதனால் இவர் ஐக்கிய அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்து, 1980-இல் இறந்தார். பகலவி வம்சத்தை நிறுவிய இவரது தந்தை ரேசா ஷா பகலவி ஈரானை 1925 முதல் 1941 முடிய ஆண்டார்.