மெய்யியலாளர்
Appearance
மெய்யியலாளர் (philosopher) என்பவர் மெய்யியலைப் பயில்பவர் ஆவார். மெய்யியலாளர் எனும் சொல், அறிவு வேட்பாளர் எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லில் பண்டைக் கிரேக்கம்: φιλόσοφος இருந்து உருவானது. இச்சொல்லை கிமு ஆறாம் நூற்றாண்டில் பித்தகோரசு எனும் கிரேக்கச் சிந்தனையாளரால் முதலில் உருவாக்கப்பட்டது.[1]
செவ்வியல் காலப் பொருளில், மெய்யியலாளர் என்பவர் சமகால மாந்த வாழ்க்கை எழுப்பும் கேள்விகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் குறிப்பிட்ட வாழ்க்கைமுறையைப் பின்பற்றி வாழ்பவர் ஆவார்]; இவர்கள் கோட்பாடுகளை ஆற்றுப்படுத்தவோ சில அறிஞர்களின் நூலுக்கு உரை எழுதவோ வேண்டிய கட்டயம் ஏதும் இல்லை.[2] இத்தகைய மிகவும் கட்டுபாடான வாழ்க்கை மேற்கொள்பவர்களே மெய்யியலாளர்களாக கருதப்பட்டனர். மேலும் அவர்கள் எலனிய மெய்யியலைக் கடைபிடித்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ φιλόσοφος. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project.
- ↑ Pierre Hadot, The Inner Citadel. p. 4