Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

லியோனீது பிரெசுனேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோனீது பிரெசுனேவ்
Leonid Brezhnev
Леонид Брежнев
220px
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர்
பதவியில்
14 அக்டோபர் 1964 – 10 நவம்பர் 1982
முன்னையவர்நிக்கிட்டா குருசேவ்
பின்னவர்யூரி அந்திரோப்பொவ்
சோவியத் உயர்பீடத் தலைவர்
பதவியில்
16 சூன் 1977 – 10 நவம்பர் 1982
முன்னையவர்நிக்கொலாய் பொத்கோர்னி
பின்னவர்யூரி அந்திரோப்பொவ்
பதவியில்
7 மே 1960 – 15 சூலை 1964
முன்னையவர்கிளிமென்ட் வரசீலொவ்
பின்னவர்அனஸ்தாசு மிக்கோயான்
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் இரண்டாவது செயலாளர்
பதவியில்
21 சூன் 1963 – 14 அக்டோபர் 1964
முன்னையவர்பிரோல் கொசுலோவ்
பின்னவர்நிக்கொலாய் பொத்கோர்னி
கசக்கஸ்தான் பொதுவுடமைக் கட்சியின் முதலாவது செயலாளர்
பதவியில்
8 மே 1955 – 6 மார்ச் 1956
முன்னையவர்பந்திலெய்மொன் பனமரியென்கோ
பின்னவர்இவான் யாக்கோவ்லெவ்
மல்தோவா பொதுவுடமைக் கட்சியின் முதலாவது செயலாளர்
பதவியில்
3 நவம்பர் 1950 – 16 ஏப்ரல் 1952
முன்னையவர்நிக்கொலாய் கோவல்
பின்னவர்திமீத்ரி கிளாத்கி
22-வது, 23-வது, 24-வது, 25-வது, 26-வது சோவியத் உயர்பீடங்களின் முழுமையான உறுப்பினர்
பதவியில்
31 அக்டோபர் 1961 – 10 நவம்பர் 1982
19-வது, 20-வது, 21-வது சோவியத் உயர்பீடங்களின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்
பதவியில்
16 அக்டோபர் 1952 – 29 சூன் 1957
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
லியோனீது இலீச் பிரெசுனேவ்

(1906-12-19)19 திசம்பர் 1906
காமியான்சுகி, எக்கத்தரீவொன்சிலாவ், உருசியப் பேரரசு
இறப்பு10 நவம்பர் 1982(1982-11-10) (அகவை 75)
சரீச்சியெ, மாஸ்கோ, உருசியா, சோவியத் ஒன்றியம்
காரணம் of deathமாரடைப்பு
இளைப்பாறுமிடம்கிரெம்லின், மாஸ்கோ
குடியுரிமைஉருசியப் பேரரசுசோவியத் ஒன்றியம்
தேசியம்உக்ரைனியர்
அரசியல் கட்சிசோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்விக்தோரியா பிரெசுனேவா
பிள்ளைகள்கலீனா,
யூரி
வாழிடம்(s)சாரேச்சியே, மாஸ்கோ
தொழில்உலோகவியல் பொறியியலாளர், அரச அதிகாரி
விருதுகள்சோவியத் ஒன்றியத்தின் வெற்றி வீரர்
கையெழுத்து
Military service
பற்றிணைப்புசோவியத் ஒன்றியம்
கிளை/சேவைசெஞ்சேனை
சோவியத் இராணுவம்
சேவை ஆண்டுகள்1941–1982
தரம்சோவியத் படைத்தலைவர்
(1976–1982)
கட்டளைசோவியத் படைத்துறை
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்

லியோனீது இலீச் பிரெசுனேவ் (Leonid Ilyich Brezhnev[1] உருசியம்: Леони́д Ильи́ч Бре́жнев; உக்ரைனியன்: Леоні́д Іллі́ч Бре́жнєв, டிசம்பர் 19 [யூ.நா. டிசம்பர் 6, 1906] 1906 – 10 நவம்பர் 1982)[2] சோவியத்-உக்ரைனிய அரசியல்வாதி ஆவார். இவர் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளராக 1964 முதல் 1982 இல் இறக்கும் வரை பதவியில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பதவியை வகித்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

சோவியத் உக்ரைனில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே உள்நாட்டுப் போர், ரஷ்யப் புரட்சி, முதல் உலகப் போர் என்று மோதல்களைப் பார்த்தும் கேள்விப்பட்டும் வளர்ந்தவர். 15 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். பகுதி நேரமாகப் பயின்று பட்டம் பெற்றார். சிறு சிறு அரசுப் பதவிகளை வகித்தார். சோவியத் தலைவர் ஸ்டாலினின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிச கட்சியில் இணைந்தார்.

  • கட்சியின் தீவிர உறுப்பினராகப் பணியாற்றினார். ‘அனைத்தும் அனைவருக்கும் சொந்தம்’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். விவசாயிகள் தங்களிடம் உள்ள உபரி தானியங்களை அரசிடம் விற்குமாறு ஸ்டாலின் அப்போது உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு விவசாயிகளை அடிபணியச் செய்தவர்களில் பிரஷ்னேவ் ஒருவர்.
  • இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, தன் பிராந்தியத்தில் கட்சியின் முக்கிய தலைவர் ஆனார். ஸ்டாலினின் ‘ரஷ்ய மயமாக்கல்’கொள்கையைப் பரப்ப அமைக்கப்பட்ட சோவியத் செம்படைப் பிரிவில் பணியாற்றினார்.
  • உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் குறுகிய காலத்திலேயே இவருக்கு பதவி உயர்வுகள், கூடுதல் பொறுப்புகளை பெற்றுத் தந்தன. விரைவில் மேஜர் ஜெனரல் ஆனார். 1946-ல் ராணுவத்தில் இருந்து விலகி கட்சிப் பொறுப்பை ஏற்றார். 1950-ல் நிகிடா குருஷேவ் இவரை மால்டேவியன் கம்யூனிச கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமித்தார்.
  • 2 ஆண்டுகள் கழித்து மாஸ்கோ சென்று வலிமைமிக்க செயலகமான கம்யூனிச கட்சியின் மத்திய குழுவில் ஸ்டாலின் தலைமையில் பணிபுரிந்தார். விசுவாசமான தொண்டராக இருந்து அவரது நம்பிக்கையைப் பெற்றார். 1953-ல் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு இவரது அரசியல் வாழ்வு சிறிது காலம் சரிவைக் கண்டது. ஆட்சியைக் கைப்பற்றிய குருஷேவ் இவரை ராணுவம் மற்றும் கடற்படை இயக்கத்தின் தலைமைப் பதவியில் நியமித்தார்.
  • 1955-ல் கஜகஸ்தானின் கம்யூனிச கட்சியின் முதல் பொதுச் செயலாளர் ஆனார். குருஷேவின் அரசியல் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்தார். 1959-ல் மத்திய குழுவின் 2-வது செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.
  • 1960-ல் சுப்ரீம் சோவியத்தின் அதிபர் ஆனார். அப்பதவியில் 1964 வரை செயல்பட்டார். 1977-ல் மீண்டும் இப்பதவிக்கு வந்தவர் 1982-ல் இறக்கும் வரை நீடித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் ரஷ்யா பல போர்களைக் கண்டது.
  • உலகம் முழுவதும் சோவியத் யூனியன் தாக்கம் கணிசமாக அதிகரித்தது. ஒரு தலைவராக எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு தன் சகாக்களை கலந்தாலோசிப்பதில் கவனமாக இருந்தவர்.
  • சோவியத் யூனியனின் வலுவான தலைவராக 18 ஆண்டுகள் செயல்பட்டவர். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் பதவி வகித்த இவர் 76-வது வயதில் மறைந்தார்.

[3]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "Brezhnev". Random House Webster's Unabridged Dictionary.
  2. Profile of Leonid Brezhnev
  3. சிவலிங்கம், ராஜலட்சுமி (19 டிசம்பர் 2014). "லியோனிட் பிரெஷ்னேவ் 10". தி இந்து தமிழ். Archived from the original on 19 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோனீது_பிரெசுனேவ்&oldid=4052298" இலிருந்து மீள்விக்கப்பட்டது