Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் மாயென்

ஆள்கூறுகள்: 70°59′N 8°32′W / 70.983°N 8.533°W / 70.983; -8.533
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் மாயென்
செய்மதியிலிருந்து நாசாவால் எடுக்கப்பட்ட ஜான் மாயெனின் ஒளிப்படம் - பீரென்பெர்கு பனியால் மூடப்பட்டுள்ளது
புவியியல்
அமைவிடம்ஆர்க்டிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்70°59′N 8°32′W / 70.983°N 8.533°W / 70.983; -8.533
பரப்பளவு377 km2 (146 sq mi)
கரையோரம்124,100 m (4,07,200 ft)
உயர்ந்த ஏற்றம்2,277 m (7,470 ft)
உயர்ந்த புள்ளிபீரென்பெர்கு
நிர்வாகம்
கவுன்ட்டிநோர்ந்துலாந்து
பெரிய குடியிருப்புஓலோங்கின்பியென் (மக். c. 18)
மக்கள்
மக்கள்தொகை18

ஜான் மாயென் (Jan Mayen) ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள, நோர்வே இராச்சியத்தின் அங்கமாகவுள்ள, உயர் தீவு ஆகும். தென் மேற்கு- வடகிழக்காக 55 km (34 mi) நீளமும் 373 km2 (144 sq mi) பரப்பளவும், பகுதியும் பனியாறுகளால் மூடப்பட்டும் உள்ளது; பீரென்பெர்கு எரிமலையைச் சுற்றி 114.2 km (71.0 mi)க்கு பனியாறுகளால் மூடப்பட்டுள்ளது. இத்தீவு இரு பகுதிகளாக உள்ளது: பெரிய வடகிழக்கு நோர்டு-ஜான் மற்றும் சிறிய சோர்-ஜான். இவை இரண்டையும் 2.5 km (1.6 mi) அகலமுள்ள குறுநிலம் இணைக்கின்றது. இது ஐசுலாந்திற்கு வடகிழக்கில் 600 km (370 mi) தொலைவிலும் மத்திய கிறீன்லாந்திலிருந்து கிழக்கில் 500 km (310 mi) தொலைவிலும் நோர்வேயின் வடக்கு முனையிலிருந்து மேற்கே 1,000 km (620 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தீவு மலைப்பாங்காக உள்ளது; மிக உயரிய சிகரமாக வடக்கில் பீரென்பெர்கு எரிமலை உள்ளது. நில இணைப்புள்ள பகுதியில் இரு பெரிய ஏரிகள் உள்ளன.

தனித்தனியாக நிர்வகிக்கப்பட்டாலும் சுவல்போர்டும் ஜான் மாயெனும் இணைந்த நாட்டு குறியீடு "SJ" பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_மாயென்&oldid=2228339" இலிருந்து மீள்விக்கப்பட்டது